மீனராசியின் பொதுவான பலன்கள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மீனம் !  🌼 ராசி மண்டலத்தில் மீன ராசி 12வது ராசியாகும். மீன ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். பு+ரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்காரர்கள் ஆவர். மீன ராசியின் வேறு பெயர்கள் : சலசம், சலசரம், அயிரை, கயல் நட்பு இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம். பொதுவான குணங்கள் : 🌼 மீனராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரக்க குணம் கொண்டிருப்பார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள். திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவார்கள், எதையும் திட்டமிட்டு ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்யக்கூடியவர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் பெற்றிருப்பார்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்கி விடுவார்கள். பேச்சைக் காட்டிலும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். 🌼 மீன ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளை சொல்லுவதில் வல்லவர்கள். இவர்கள் தான தர்மம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் அதிக லாபம் ஈட்டும் திறமை பெற்றவர்கள். தன் சொந்த முயற்சியால் கிடைத்த பணத்தைக் கொண்டு சொத்து சேர்ப்பார்கள். சுகபோகமாக வாழ்வதையே விரும்புவார்கள். 🌼 இவர்கள் அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்புகளை பெறுவர். எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் சிறந்து விளங்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கைப் பிறகு செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் மிகப்பெரிய அதிகாரியாகவும், ஆராய்ச்சியாளராகவும், போதிக்கக் கூடியவராகவும், கல்வித் துறை மற்றும் வழக்கறிஞர் துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அடக்கத்தில் சிறந்தவர்கள். வாழ்க்கையில் புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்வார்கள். அதிஷ்டம் தரக் கூடியவைகள் : எண் - 1,2,3,9 நிறம் - மஞ்சள், சிவப்பு கிழமை - வியாழன், ஞாயிறு கல் - புஷ்பராகம் திசை - வடகிழக்கு இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment