லக்கன பலன்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஜாதகப்படி லக்ன பலன்கள் !  💥 ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் கணிக்கமுடியும். 💥 ஒவ்வொரு லக்னத்துக்கும் லக்னாதிபதி மாறுபடுவார். எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்துக்கு உரிய அதிபதி ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்கவேண்டும். அப்போதுதான் யோக பலன்களை எதிர்பார்க்கமுடியும். லக்னாதிபதிக்கு அடுத்து அந்தக் குறிப்பிட்ட லக்னத்துக்கு யோக பலன்களைத் தரும் கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் ஜாதகருக்கு யோக பலன்கள் நடைபெறும். 💥 லக்னத்தில் சுபகிரகம் இருந்தாலும், சுபகிரகம் பார்த்தாலும் எண்ணிய எண்ணம் தடையின்றி நடக்கும். 💥 லக்னத்தில் சனி நின்றால் சரியான சமயத்தில் புத்தி வேலை செய்யாமல் போய்விடும். சில சமயங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். 💥 லக்னத்தில் சு+ரியன், செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் ஜாதகரின் உடல்நிலை அதிக வெப்பத்துடன் காணப்படும், அடிக்கடி டென்ஷனாக இருப்பார். 💥 லக்னம் மேஷமாக இருந்து 10க்குடைய சனி உச்சம் பெற்றால் அரசு உத்யோகம் அமையும். திடீர் யோகம் ஏற்படும். 💥 லக்னத்தில் ராகு அல்லது கேது நின்றுவிட்டால் எந்த விஷயத்திலும் உடனே முடிவு எடுக்கமாட்டார்கள். முடிவு எடுத்தாலும் உடனே மனம் மாறிவிடுவர். 💥 லக்னத்தில் - லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும் கூடி நிற்க சுபர் பார்த்தால் ஜாதகர் தீர்காயுளுடன் வாழ்வர். 💥 சுக்கிரன் - சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு எப்போதும் அவர்களிடம் வெள்ளி நிறைந்து இருக்கும். 💥 மேஷ லக்னத்திற்கு சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் அதிர்ஷ்டம் உண்டாகி திடீர் பணவரவு ஏற்படும். 💥 கடக லக்னத்திற்கு 2-க்குடையவன் சு+ரியன் லக்னத்தில் இருந்துவிட்டால் ஜாதகர் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். 💥 லக்னத்தில் சனி இருந்தால் எண்ணங்கள் உடனே ஈடேறாமல் காலதாமதம் ஆகும். அந்த காலதாமதம் கூட ஒரு வகையில் நன்மையை உண்டாக்கும். 💥 லக்னத்தை சு+ரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோர் பார்த்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 💥 ஜென்ம இராசிக்கு சந்திரன் 3,6,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்களே ஆகும். 💥 ஒருவருக்கு லக்னத்தில் சனி, கேது, புதன் தனித்து இருந்தால் அடிக்கடி ஞாபக மறதி உண்டாகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment