ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
குரு பகவானி ஆசி பெறும் முறைகள்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
குரு பகவானுடைய ஆசியை பெறும் முறைகள்.....!!

நவக்கிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். 'குரு இருக்கும் இடம் பாழ். பார்க்கும் இடம் விருத்தி" என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும்.
குரு நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்க வழிமுறைகள் சில....
🌸 அன்றாடம் தலை முழுகிக் குளித்துத் தூய உடைகளை அணிந்து, நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்.
🌸 அதிகாலையில் எழுந்து நீராடி குரு வணக்கம், குரு காயத்ரி, குரு ஸ்துதி, குரு த்யானம், குரு அஷ்டாதச நாமார்ச்சனை (18 நாமங்கள்), குரு அஷ்டோத்ரசத நாமாவளி (108 நாமங்களின் வரிசை) ஆகியவற்றை உச்சரித்து குருபகவானை வழிபடலாம்.
🌸 வீட்டிலிருந்தபடியே குருபகவானை நினைத்து வணங்கி, கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல்.
குருவிற்கு வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :
🌸 வியாழக்கிழமை தோறும் சிவன்கோவில் சென்று, அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதட்சணாமூர்த்தி சுவாமிக்கு அர்ச்சனை அல்லது கற்பு+ர ஆரத்தி செய்து வணங்கி வருவது நல்லது.
🌸 ஆலயங்களில் நவக்கிரக மூர்த்திகளிடையே உள்ள குருவுக்கு வியாழனன்று கொண்டைக்கடலை மாலை சாற்றி, முல்லைப்பு+, சாமந்திப்பு+ மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது நன்மை தரும்.
🌸 வேக வைத்த கொண்டைக்கடலை சிறிதளவு கலந்த சாதத்தைக் காகத்திற்கு வியாழக்கிழமைகளில் வைப்பதும் நல்லது.
🌸 வியாழக்கிழமை தோறும் கொண்டைக்கடலை சுண்டல், மஞ்சள் வாழைப்பழம், தேன், சர்க்கரை, கல்கண்டு மற்றும் இதர இனிப்புப் பொருள்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை குருபகவானை நினைத்து அவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
🌸 வியாழக்கிழமையில் மஞ்சள் நிறத் துணியில், கொண்டைக்கடலை சுண்டல், மஞ்சள் வாழைப்பழம், முல்லைப்பு+ அல்லது சாமந்திப்பு+, மூன்று கூட்டு எண்ணிக்கையுள்ள பணம் (ரூபாய் 3, 12, 21, 30) தாம்பு+லம் ஆகியவற்றை முடிப்பாக வைத்து வயது முதிர்ந்த பிராமணருக்கு குரு ஓரை நேரமாகிய காலை 6 - 7-க்குள் அரசமரத்தடியின் கீழிருந்து தானம் செய்ய வேண்டும்.
குரு பகவான் அருள் பெற்ற ஸ்தலங்கள் :
🌸 நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலுள்ள குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
🌸 தஞ்சாவு+ரில் உள்ள திட்டையில் (தென்குடித் திட்டையில்) உள்ள ஸ்ரீ பசுபதிநாதர் கோவில்
🌸 சென்னை அருகில் பாடியில் உள்ள, வலிதாயநாதர் கோவில்
🌸 திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் கோவில் ஆகியவை குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய ஸ்தலங்களாகும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment