சுப காரியங்கள் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB சுபகாரியங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்கள் !  🌟 நல்ல நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடைபெறும். எந்த ஒரு நல்ல செயலையும் செய்யும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பது அவசியம். 🌟 எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். 🌟 கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு நாம் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம். 🌟 எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுவன பற்றி தெரிந்துக் கொள்வோம். நட்சத்திரங்களும் சுபகாரியங்களும் : 🌟 அஸ்வினி - விவாகம், சமுத்திர பயணம், மாங்கல்யம் செய்தல், உபநயனம். 🌟 ரோகிணி - விவாகம், சீமந்தம், கிரகப்பிரவேசம் 🌟 மிருகசீரிஷம் - விவாகம் 🌟 புனர்பு+ஷம் - விவாகம், உபநயனம் 🌟 பு+சம், மகம், உத்திரம், ஹஸ்தம் - விவாகம் 🌟 சுவாதி - கிரகப்பிரவேசம், விவாகம் 🌟 மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் - விவாகம் 🌟 உத்திரட்டாதி, ரேவதி - விவாகம் திதிகளும், சுபகாரியங்களும் : 🌟 துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விவாகம் செய்ய முக்கிய திதிகளாகும். லக்னங்களும், சுபகாரியங்களும் : 🌟 ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகியவை விவாகம் செய்ய நல்ல லக்னங்களாகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஏக லக்கன பொருத்தம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஏக லக்ன பொருத்தம்..!!  👫 புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் இவை இரண்டையும் தரவல்லது ஏகலக்னப் பொருத்தமாகும். மேலும் 5, 9-ம் இட லக்னங்களும் திருமண வாழ்க்கைக்கு முக்கியமாக கருதப்படுகிறது. 👫 ஏகலக்னத்தில் இணைந்த இனிய இல்லறத் தம்பதிகள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றனர். வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகள், மனஒற்றுமை, ஆண், பெண் குழந்தைகள், இன்னும் சகல சம்பத்துகளும் பெறுகின்றனர். ஏக லக்னம் இருவரிடமும் ஒத்த எண்ணங்களையே தூண்டுகின்றன. இதுபோன்ற ஒத்த எண்ணங்கள் ஒன்றையொன்று வலுவு+ட்டிக் கொண்டு தங்களின் இலக்கை அடைகின்றன. லக்னப் பொருத்தம் : 👫 லக்னம் என்பது ஜாதக கட்டத்தில் முதல் வீடாகும். ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது சு+ரியன் எந்த ராசி மண்டலத்தில் உள்ளதோ அந்த ராசி மண்டலம் லக்னமாக செயல்படும். 👫 ராசியை விட உயர்ந்த லக்னத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஜாதகர் தன் லக்னத்திற்கு தீமை செய்யும் 4, 6, 8, 12 லக்னம் இல்லாதவரை திருமணம் செய்தால் நன்மை ஏற்படும். 👫 ஆணின் ஜென்ம லக்னத்திற்கு எந்த ஸ்தானத்தில் (1, 2......12) பெண்ணின் பிறப்பு லக்னமாக வருகிறதோ, அந்த ஸ்தானத்திற்கு சொல்லப்பட்ட பலன்கள், அந்தப் பெண்ணை மணம் முடித்ததிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும். இதுவே லக்னப் பொருத்தத்தின் பொதுவிதி ஆகும். 7மிட லக்னம் : 👫 மேஷ லக்ன ஆணிற்கு 7 மிடம் துலா லக்னப் பெண்ணை இணைக்கலாம். இருவரின் லக்னாதிபதிகளாகிய செவ்வாயும் சுக்கிரனும் பகை அல்ல. எனவே நல்ல ஒற்றுமை இருக்கும். 👫 ரிஷப லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு 7மிட விருச்சிக லக்ன பெண் அல்லது ஆணை திருமணம் செய்யலாம். இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கும். 👫 மிதுன லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு 7மிட தனுசு லக்னப் பெண் அல்லது ஆணை கண்டிப்பாக திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால் லக்னாதிபதிகள் குருவும், புதனும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள். எனவே மிதுன லக்னத்திற்கு 7மிட தனுசு லக்னத்தைப் பொருத்துதல் கூடாது. 👫 கடக லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு மகர லக்ன ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால் கடக லக்னாதிபதி சந்திரனும் மகர லக்னாதிபதி சனியும் பரம பகையாளிகள். எனவே இருவரும் ஒன்றிணைதல் கூடாது. 👫 சிம்ம லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு கும்ப லக்ன ஆண் அல்லது பெண்ணை இணைக்கக் கூடாது. ஏனென்றால் சிம்ம லக்னாதிபதி சு+ரியனும், கும்ப லக்னாதிபதி சனியும் ஜென்ம விரோதிகள். 👫 கன்னி லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு மீன லக்ன ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால் கன்னி லக்னாதிபதி புதனும், மீன லக்னாதிபதி குருவும் பகைவர்கள். 👫 துலா லக்ன ஆண் அல்லது பெண்ணை 7 மிட மேஷ லக்ன ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம். 👫 விருச்சிக லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு ரிஷப லக்ன ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்யலாம். 👫 தனுசு லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு மிதுன லக்ன பெண் அல்லது ஆணை திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால் குருவும், புதனும் பகைவர்கள் ஆவர். 👫 மகர லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு கடக லக்ன பெண் அல்லது ஆணை இணைத்தல் கூடாது. 👫 கும்ப லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு சிம்ம லக்ன பெண் அல்லது ஆணை பொருத்துதல் கூடாது. 👫 மீன லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு கன்னி லக்ன ஆண் அல்லது பெண்ணை சேர்த்தால் சிறப்பான வாழ்வு அமையாது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

துளசி தீர்த்தத்தின் மகிமை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp துளசி தீர்த்தத்தின் மகிமை..!  🌿 பெருமாளுக்கு உகந்தது துளசி. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசம், பச்சைக்கற்பு+ரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியும் அலாதியானது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுவது. 🌿 அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பு+ஜைகளுக்கு பொது அர்ச்சனைக்காகவும் துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர். 🌿 துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள். துளசிமாடம் கட்டி விளக்கேற்றிப் பராமரிக்கிறார்கள். கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. துளசி தீர்த்தத்திற்காக கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார்செய்யலாம். 🌿 சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் மூதாதையர்கள் கைக்கொண்டிருந்தனர். ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை பறித்து போட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம். 🌿 துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 🌿 பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. துளசி ஆராதனை துதி! நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான் கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா! 🌿 குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், சர்வ மங்களங்களும் சித்திக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

நட்சத்திர தலங்கள் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய வை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !  🌟 நீங்கள் பிறந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய அதிதேவதையை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளிடமிருந்தும், உங்கள் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் வல்லமை படைத்தது. நட்சத்திர தலங்கள் : 🌟 27 நட்சத்திரங்களில், அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று நட்சத்திர தலங்களுக்கு சென்று, அவரவர்க்குரிய நட்சத்திர தல தெய்வங்களை வணங்கினால் வேண்டிய பலன் கிடைக்கும். 🌟 நீங்கள் பரிகார தலங்களுக்கு கொண்டு செல்லும் நைவேத்யங்களை தக்க விதத்தில் நிவேதனம் செய்து கடவுளின் அருளை பெறலாம். 🌟 தாங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை : 🌟 ஆலயங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை இறை சிந்தனையோடு செல்ல வேண்டும். வீண் பேச்சுகளையும், தேவையற்ற விவாதங்களையும் தவிர்க்க வேண்டும். 🌟 இறைவன் திருவுருவங்களை தொட்டு வணங்கக் கூடாது. இரு கை கூப்பி தான் வணங்க வேண்டும். 🌟 கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்க வேண்டும். கோவிலின் உள்ளே விழுந்து வணங்க கூடாது. 🌟 தரிசனம் செய்யும் போது அவசரம் கூடாது. 🌟 விபு+தி, குங்குமம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். 🌟 கோவிலை சுத்தத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகள் ஏதாவது கோவிலில் இருந்தால் அதை சுத்தப்படுத்துவதன் மூலம் புண்ணியங்களை பெறலாம். 🌟 கோவில் அர்ச்சகரிடம் உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். 🌟 கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது மனஅமைதியுடன் சுற்றி வர வேண்டும். உடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டு செல்லுதல் கூடாது. 🌟 கோவில்களுக்கு சென்று வழிபடும்போது, தங்களது ராசியையும் கூறி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். 🌟 உங்களது ராசிக்குரிய விருட்சத்தை(மரத்தை) உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கோவிலிலோ வைத்து வணங்கி வருவதன் மூலம் துன்பங்கள் நீங்கும். 🌟 அவரவர் பிறந்த நட்சத்திரங்கள் அன்று அவரவர் நட்சத்திர தலங்களுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழலாம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கண் திருஷ்டி தோஷம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கண் திருஷ்டி தோஷம் !  👀 கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள் உண்டு. 👀 அந்த கண்பார்வைக்கு தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உண்டு. இதை தான் கண்திருஷ்டி தோஷம் என்கிறார்கள். பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக்கூடும். 👀 இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச் செய்கிறது. பணக்காரர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் மற்றவர்களால் திருஷ்டி தோஷம் ஏற்படுவது இயல்பு. 👀 அதனால்தான் 'கல்லடிபட்டாலும் படலாம். ஆனால், கண்ணடி மட்டும் படவே கூடாது" என்பார்கள். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையு+றுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சு+ழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். கிரகப் பார்வை தோஷங்கள் : 👀 பார்வைகளிலே சுப பார்வை, அசுப பார்வை என இருவகை உண்டு. ஜாதகத்தில் குரு பார்வை மிகவும் சிறப்பாகும். குரு பார்க்க தோஷ நிவர்த்தி உண்டு. அதேபோல் நீச கிரக பார்வை 6, 8, 12ம் அதிபதிகளின் சேர்க்கை பார்வை பல கெடுபலன்களைத் தரும். 👀 தோஷ ஆதிபத்தியம் பெற்ற சனிபார்வையால் பல தடைகள், இடையு+றுகள் ஏற்படும். உச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை செய்யும், நீச பலம், தீய சேர்க்கை உள்ள கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். 👀 பொதுவாக 6, 8, 12ம் தசைகள் வரும்போது சில மாற்றங்கள் உண்டாகும். அதேபோல் ராகு, கேது, சந்திரன், சனி ஆகியவை சாதகமில்லாத வீடுகளில் இருந்துகொண்டு தசா நடக்கும்போது கெடுபலன்கள் அதிகம் இருக்கும். கண்திருஷ்டி, பொறாமை, சு+ன்யம் ஏவல் எல்லாம் இந்த காலக்கட்டத்தில்தான் வேலை செய்யும். லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ஆகிய மூன்று விஷயங்களில் பலம் குறைந்த ஜாதகங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றன. 👀 லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும். கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புத்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கண் திருஷ்டி போக்கும் பரிகாரம் : 👀 ஒவ்வொருவரின் ஜாதகப்படியான கிரக நிலைகள், தசைகளை அனுசரித்து செய்யப்படும் பரிகார முறைகள், தனிப்பட்ட வகையில் பலன் தரும். பொதுவான பரிகார முறைகள் உள்ளன. அவை 👀 வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் வருபவர்களின் பார்வையையும், கெட்ட எண்ணங்களையும், திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். 👀 மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். 👀 வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். இதனால் சகல திருஷ்டி, தோஷம் நீங்கி செல்வ வளம், மனநிம்மதி மற்றும் மகிழ்ச்சி பெருகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

லக்கன பலன்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஜாதகப்படி லக்ன பலன்கள் !  💥 ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் கணிக்கமுடியும். 💥 ஒவ்வொரு லக்னத்துக்கும் லக்னாதிபதி மாறுபடுவார். எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்துக்கு உரிய அதிபதி ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்கவேண்டும். அப்போதுதான் யோக பலன்களை எதிர்பார்க்கமுடியும். லக்னாதிபதிக்கு அடுத்து அந்தக் குறிப்பிட்ட லக்னத்துக்கு யோக பலன்களைத் தரும் கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் ஜாதகருக்கு யோக பலன்கள் நடைபெறும். 💥 லக்னத்தில் சுபகிரகம் இருந்தாலும், சுபகிரகம் பார்த்தாலும் எண்ணிய எண்ணம் தடையின்றி நடக்கும். 💥 லக்னத்தில் சனி நின்றால் சரியான சமயத்தில் புத்தி வேலை செய்யாமல் போய்விடும். சில சமயங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். 💥 லக்னத்தில் சு+ரியன், செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் ஜாதகரின் உடல்நிலை அதிக வெப்பத்துடன் காணப்படும், அடிக்கடி டென்ஷனாக இருப்பார். 💥 லக்னம் மேஷமாக இருந்து 10க்குடைய சனி உச்சம் பெற்றால் அரசு உத்யோகம் அமையும். திடீர் யோகம் ஏற்படும். 💥 லக்னத்தில் ராகு அல்லது கேது நின்றுவிட்டால் எந்த விஷயத்திலும் உடனே முடிவு எடுக்கமாட்டார்கள். முடிவு எடுத்தாலும் உடனே மனம் மாறிவிடுவர். 💥 லக்னத்தில் - லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும் கூடி நிற்க சுபர் பார்த்தால் ஜாதகர் தீர்காயுளுடன் வாழ்வர். 💥 சுக்கிரன் - சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு எப்போதும் அவர்களிடம் வெள்ளி நிறைந்து இருக்கும். 💥 மேஷ லக்னத்திற்கு சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் அதிர்ஷ்டம் உண்டாகி திடீர் பணவரவு ஏற்படும். 💥 கடக லக்னத்திற்கு 2-க்குடையவன் சு+ரியன் லக்னத்தில் இருந்துவிட்டால் ஜாதகர் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். 💥 லக்னத்தில் சனி இருந்தால் எண்ணங்கள் உடனே ஈடேறாமல் காலதாமதம் ஆகும். அந்த காலதாமதம் கூட ஒரு வகையில் நன்மையை உண்டாக்கும். 💥 லக்னத்தை சு+ரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோர் பார்த்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 💥 ஜென்ம இராசிக்கு சந்திரன் 3,6,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்களே ஆகும். 💥 ஒருவருக்கு லக்னத்தில் சனி, கேது, புதன் தனித்து இருந்தால் அடிக்கடி ஞாபக மறதி உண்டாகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !  🌟 நீங்கள் பிறந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய அதிதேவதையை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளிடமிருந்தும், உங்கள் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் வல்லமை படைத்தது. நட்சத்திர தலங்கள் : 🌟 27 நட்சத்திரங்களில், அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று நட்சத்திர தலங்களுக்கு சென்று, அவரவர்க்குரிய நட்சத்திர தல தெய்வங்களை வணங்கினால் வேண்டிய பலன் கிடைக்கும். 🌟 நீங்கள் பரிகார தலங்களுக்கு கொண்டு செல்லும் நைவேத்யங்களை தக்க விதத்தில் நிவேதனம் செய்து கடவுளின் அருளை பெறலாம். 🌟 தாங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை : 🌟 ஆலயங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை இறை சிந்தனையோடு செல்ல வேண்டும். வீண் பேச்சுகளையும், தேவையற்ற விவாதங்களையும் தவிர்க்க வேண்டும். 🌟 இறைவன் திருவுருவங்களை தொட்டு வணங்கக் கூடாது. இரு கை கூப்பி தான் வணங்க வேண்டும். 🌟 கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்க வேண்டும். கோவிலின் உள்ளே விழுந்து வணங்க கூடாது. 🌟 தரிசனம் செய்யும் போது அவசரம் கூடாது. 🌟 விபு+தி, குங்குமம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். 🌟 கோவிலை சுத்தத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகள் ஏதாவது கோவிலில் இருந்தால் அதை சுத்தப்படுத்துவதன் மூலம் புண்ணியங்களை பெறலாம். 🌟 கோவில் அர்ச்சகரிடம் உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். 🌟 கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது மனஅமைதியுடன் சுற்றி வர வேண்டும். உடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டு செல்லுதல் கூடாது. 🌟 கோவில்களுக்கு சென்று வழிபடும்போது, தங்களது ராசியையும் கூறி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். 🌟 உங்களது ராசிக்குரிய விருட்சத்தை(மரத்தை) உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கோவிலிலோ வைத்து வணங்கி வருவதன் மூலம் துன்பங்கள் நீங்கும். 🌟 அவரவர் பிறந்த நட்சத்திரங்கள் அன்று அவரவர் நட்சத்திர தலங்களுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழலாம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?  💥 பொதுவாக காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிகிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு என்ன நன்மை ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம். அதை பற்றி இங்கே பார்ப்போம். 💥 சனி பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். 💥 நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம். 💥 காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. 💥 காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். 💥 இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை ஆகாயத்தோட்டி என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள். 💥 காகத்திற்கு உணவு வைத்தால் தேக ஆரோக்கியம் சீராகும். மேலும் காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை அழைக்கும்போது காகம் வந்து வீட்டின் மேற்கூரையிலோ அல்லது மரக்கிளைகளின் மீதோ வந்து அமரும். நாம் வைத்த உணவையும் சாப்பிட்டு, நம் வீட்டினுள் ஏதேனும் பு+ச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறது. 💥 இதனால் நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க உதவுகிறது. காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, ஒரு காகம் தன் கூட்டத்தையே அழைத்து உணவை பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் பொழுது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபு+ரணமாக கிடைக்கும். சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும். சனிபகவானின் அருளும் கிடைக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

அதியம்

உலக செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனே தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யவும். https://goo.gl/S0kVHU

லக்னத்தில் சுபகாரியம் செய்யலாம்?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB லக்னத்திலும் சுபகாரியம் செய்யலாம் !  💥 நல்ல நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடைபெறும். எந்த ஒரு நல்ல செயலையும் செய்யும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பது அவசியம். நல்ல லக்னங்கள் நடைபெறும் நேரத்திலும் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடக்கும். திருமணம் : 💥 ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, துலாம், கும்பம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் திருமணம் செய்தால் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கல்வி கற்றல் : 💥 மேஷம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் குழந்தைக்கு கல்வி கற்க தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். கல்வியால் பல மேன்மைகள் உண்டாகும். விதை விதைத்தல் : 💥 ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் விதை விதைத்தால் பயிர் விளைச்சல் முதல் தரமாக இருக்கும். தங்க நகை : 💥 ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் தங்க நகை அணிந்துக் கொண்டால் மேலும் மேலும் தங்க நகை சேர்ந்துக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் வேலை : 💥 ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் வேலை தடைப்பட்டு நிற்காமல் நடைபெற்று கொண்டே இருக்கும். கிரகப்பிரவேசம் : 💥 ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் செல்வம் செழிக்கும். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நிலம் வாங்குதல் : 💥 சிம்மம், தனுசு, மகம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் நிலத்தை வாங்கினாலும் அல்லது விற்றாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

விவசாயமம் செய்ய ஏற்ற நாள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB விவசாயம் செய்ய ஏற்ற நாள்....!!  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். அந்த வகையில் விவசாயம் செய்ய உகந்த நாள்கள் பற்றிப் பார்ப்போம். 🌱 'ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதற்கேற்ப விதை தூவ, விளை நிலங்களில் கால்வைக்க உகந்த மாதமாகவும் ஆடிமாதம் கருதப்பட்டது. விவசாயிகள் சேற்றிலே காலை வைத்தால் தான், நாம் சோற்றிலே கைவைக்க முடியும் என்பதால் நம் பசிப்பிணி தீர நடவுத் தொழிலுக்கு ஏற்ற மாதமாக ஆடி மாதம் கருதப்படுகின்றது. 🌱 ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். 🌱 பு+மித் தாயே சு+ல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை வணங்கினால், விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்கும். சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்தால் விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம். ஏற்ற கிழமைகள் : 🌾 திங்கட்கிழமை : விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும் சிறப்பான நாளாக திங்கட்கிழமை திகழ்கின்றது. மேலும் விதையிடுதல், உரமிடல், வியாபாரம் துவங்க ஏற்ற நாள். 🌾 புதன் கிழமை : விவசாயிகள் வயல்களில் விதைப்பதற்கும், இடுபொருள்களை இடுவதற்கும், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்ற நாள். 🌾 வியாழக்கிழமை : விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் செய்ய ஏற்ற தினம். 🌾 வெள்ளிக்கிழமை : நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது. 🌾 சனிக்கிழமை : எள், பருத்தி ஆகியவற்றை விதைத்தால் அவை நல்லமுறையில் வளர்ந்து மிகுதியான விளைச்சலை தரும். ஏற்ற நட்சத்திரங்கள் : 🌾 அஸ்வினி : தானியம் வாங்கலாம். 🌾 பரணி : தானியம் சேமிப்பு சிறந்தது. மாடு போன்ற விலங்குகள் வாங்க சிறந்த நாள். 🌾 மிருகசீரிடம் : விவசாய வேலை அனைத்தும் செய்ய ஏற்ற நாள். 🌾 திருவாதிரை : தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க உத்தமமான நாள். பரிகாரம் : 🌱 வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவு+ர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது. 🌱 விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள். 🌱 ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான விவசாயத்தை நல்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB செல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்..?  ஒருவருடைய ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் கெட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது கடினமாக இருக்கும். சுக்கிரன் வசதி வாய்ப்புகளுக்கு அதிபதி என்றால் குரு செல்வாக்குக்கு, கௌரவத்துக்கு, குழந்தை பாக்யத்துக்கு அதிபதி. இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையை முழுமை செய்யகூடியவை. 🌟 அதற்கு அடுத்தபடியாக செவ்வாயும், சனியும் உங்களுக்கு சக்தி கொடுப்பவர்கள். எனர்ஜி இல்லாவிட்டால் சோம்பலும், சலிப்பும் வந்துவிடும். அதிகமாக உழைக்க முடியாது. 🌟 அடுத்த கட்டமாக திறமை இருந்தால்தானே எல்லாவற்றையும் உருவாக்க முடியும். அதை தருபவர்கள் புதன் மற்றும் சந்திரன். 🌟 எதையும் துணிந்து செய்யவேண்டும் எனில் நல்ல நிர்வாகதிறன் வேண்டுமெனில் சு+ரியன், ராகு, செவ்வாய் துணை வேண்டும். 🌟 வாழ்க்கையில் இனி என்ன செய்யப்போகிறோம். மற்றவருக்காக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி ஞானத்தையும், நல்லது கெட்டதையும் நமக்கு உணர்த்துபவர்கள் கேது மற்றும் குரு பகவான் ஆவார்கள். 🌟 தாய், தந்தை வழிகாட்டல் இல்லா குழந்தை நிலைதான் ஜாதகத்தில் சு+ரியன், சந்திரன் இரண்டு ஒளி கிரகங்கள் கெட்டு விட்டால், வாழ்க்கை இருள் நிறைந்து காணப்படும். சு+ரியன் நிர்வகிக்கும் தன்மையை சிதைத்து விடுகிறார். சந்திரன் மனதை கெடுத்து, மனம் போன போக்கில் வாழும் நிலையை உண்டாக்குகிறார். 🌟 ஒருவடைய ஜாதகம் எப்படி இருந்தாலும் யோகமான கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தால் அந்த ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். 🌟 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, பிறந்த நட்சத்திர அதிபதி, பிறந்த ராசி அதிபதி, பிறந்த கிழமை அதிபதி கெடாமல் இருந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெறலாம். ஜாதகத்தில் பல யோகங்கள் இருப்பினும் அதன் திசை புத்தி வந்தால்தான் அதை அனுபவிக்க முடியும். 🌟 பு+சம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற சனியின் நட்சத்திரங்கள் அனைத்தும் சுபகாரியம் செய்ய மிகவும் உகந்தவை. எந்த காரியமும் செய்தாலும் நிலையான நீடித்த பலன்களை கொடுக்கும். அதிர்ஷ்டம் உண்டாக்கும் பரிகாரங்கள் : கபிஸ்தலம் : 🌙 கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு-கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. 🌙 வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். 🌙 இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீக்கும். மூன்றாம் பிறை : 🌙 கை, கால் முகம் கழுவிவிட்டு, கையில் ஒரு மலர், ஒரு ரூபாய் காயின் எடுத்துக்கொண்டு வந்து மூன்றாம் பிறையை பார்த்து குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கி உங்கள் மனதில் நினைத்தை வேண்டிக்கொண்டு, பு+ஜையறையில் தீபமேற்றி அந்த மலரை வைத்து வணங்கி வர நினைத்தது விரைவில் நடைபெறும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

தொழில் அமைய கிரகங்களுக்கு சம்பந்தம் உண்டா !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நல்ல தொழில் அமைய கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டா?  🌀 ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை பொருந்தியிருக்கின்றதோ அதற்கேற்ப அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது. ஒருவனின் உத்யோகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். 🌀 ஒருவருக்கு தொழில் நிரந்தரமாக அமைய ஜாதக அமைப்பும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 🌀 தொழில் தொடங்கும் போதும், திருமணம், கிரகபிரவேஷம் போன்ற முக்கியமான வேலைகள் தொடங்கும் போது லக்னம், லக்னாதிபதி கெடாமல் இருக்க வேண்டும். மேலும் 8ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 🌀 துணிமணிகள், வண்ண ஆடைகள் விற்பனை செய்ய புதன், சந்திரன் ஆதிக்கம் இருக்க வேண்டும். 🌀 வாகன ஓட்டுநர்களுக்கு சனி, சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒத்துழைப்பு வேண்டும். 🌀 ஜோதிடத் தொழில் அமைய புதன், குரு துணையுடன் 2ம் பாவம் கெடாமல் இருக்க வேண்டும். 🌀 புதன், குரு கிரகம் ஏஜெண்ட் தொழிலுக்குரிய கிரகம். மளிகை கடை வியாபாரம் அமைய புதன், குருவே காரணமாக அமைகிறது. 🌀 சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் துணை இருந்தால் ஓட்டல் தொழிலில் லாபம் பார்க்கலாம். 🌀 எழுது பொருட்கள் பேனா, பென்சில் விற்பனை செய்து லாபம் அடையக்கூடிய கிரகம் புதன், குரு ஆகும். 🌀 2, 11ம் இடத்தில் குரு, புதன், செவ்வாய் சம்பந்தம் பெற்று இருந்தால் டெலிபோன் துறையில் பணிபுரியலாம் அல்லது டெலிபோன் துறையில் அதிக லாபத்தை ஈட்டலாம். 🌀 சினிமாத் துறையில் ஸ்டுடியோ வேலைகள், மேனேஜர், நுட்பமான கருவி, கேமரா, விளம்பரம் போன்ற வேலைக்கு புதன் கிரகமே மூலக் காரணமாக இருக்கிறார். 🌀 சு+ரியன், சந்திரன், கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் அனைத்தும் ராசிக்கு 10ம் பாவத்திற்கு தொடர்பு இருந்தால் நர்ஸ் பணி செய்வர். 🌀 கலைத்துறைக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் ரிஷப, துலாம் லக்னக்காரர்கள் நிறைய பேர் சினிமாத் துறையில் இருக்கிறார்கள். 🌀 கட்டிட வேலை செய்பவர்களுக்கு ஜீவஸ்தானம், பத்தாம் பாவத்திற்கும், செவ்வாய், சுக்கிரன், சனி சம்பந்தம் இருக்க வேண்டும். 🌀 செவ்வாய், புதன், சுக்கிரன் 1, 2, 10, 11ல் நின்று சந்திரன் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் தையல் தொழில் செய்வர். 🌀 வாகனங்கள் ஓட்டும் வேலை, 3ம் பாவத்தில் 10க்குடையவர்கள் சுக்கிரன், சனி, சந்திரன் சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும். 🌀 தபால்துறை வேலைக்கு புதன் கிரகத்தின் ஆதிக்கம் தான் காரணம். அத்துடன் சனி சேர்ந்து 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் ஜாதகர் தபால்காரராக இருப்பார். 🌀 வங்கி வேலை கிடைக்க குரு ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும். குரு, புதன் தொடர்பு இருந்து 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் வங்கியில் கிளார்க்காக இருப்பார். 🌀 சனி 1, 2, 10, 11ல் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் துப்புரவு தொழில் செய்வார். 🌀 சு+ரியன், செவ்வாய் பலம் பெற்று 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் மருந்து கடை வைத்து நடத்துவார். 🌀 எந்த கிரகம் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருக்கின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

விஷ்ணு பகவான் பற்றி தெரிந்து கொள்வோம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் !  ⭐ காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். இவர் திருமால், கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். திருமாலின் ஏகாதசி : ⭐ ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் மூன்று ஏகாதசிகள் மிகவும் நற்பலன்களை தரும். ஆனி மாதம் வரும் ஹரியன ஏகாதசி திருமால் சயனம் மேற்கொள்ளும் நாள். ஆவணி மாதம் வரும் சுக்ல ஏகாதசி திருமால் படுக்கையில் புரளும் நாள். ஐப்பசி மாதம் வரும் வீயுத்தான ஏகாதசி திருமால் படுக்கையிலிருந்து எழும் நாள். இந்த ஏகாதசி நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் நற்பலன்களை பெறலாம். துளசி : ⭐ திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு : ⭐ நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும். ⭐ நரசிம்மரை தொடர்ந்து வழிபடுவதால் பில்லி, சு+னியம், செய்வினை, எதிரிகளால் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பார். ⭐ சந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மரை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திர தினத்தன்று பு+ஜித்து வந்தால் கடன்கள், நோய்கள், திருமணத் தடை தீரும். ⭐ வெற்றியை எதிர்நோக்கி காத்து கொண்டிருப்பவர்கள் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்று வழிபட வேண்டும். ⭐ நரசிம்மரை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வும், வளமான வாழ்க்கையும் பெறலாம். ஆஞ்சநேயர் : ⭐ ஆஞ்சநேயரை சாந்த வடிவில் தான் வழிபட வேண்டும். மஞ்சள் கலந்த குங்குமம், துளசி, வெண்ணெய் போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ⭐ அனுமனின் அருள் வேண்டுபவர்கள் இராம மந்திரத்தை தினசரி கூறினால் போதும். விஷ்ணுவின் சிறப்புகள் : ⭐ விஷ்ணு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்தம், மஞ்சள் காப்பு, திருத்துழாய், சிவப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. சடாரி பக்தர்களின் தலையில் வைப்பது திருமாலின் திருவடியே நம் தலையில் படுவதாக ஐதீகம். ⭐ திருமாலின் உடலிலிருந்து உருவானதே எள்ளும், தர்ப்பையும். சிரார்த்த காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் விஷமிகள் விரட்டியடிக்கப்படுவார்கள். ⭐ மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் எள்ளிற்கு உண்டு. தர்ப்பை உபயோகிக்காமல் செய்யும் கர்மாக்கள் முழுமை பெறாது என்பது ஐதீகம். ⭐ கோவில்களில் வலம் வரும்போது திருமாலுக்கு 4 முறையும், லட்சுமிக்கு 4 முறையும், ஆஞ்சநேயருக்கு 11 அல்லது 16 முறையும் பிரதட்சிணம் செய்ய வேண்டும். ⭐ திருமால் கோவிலுக்கு சென்று முதலில் அவரின் முகத்தை பார்த்து வணங்கக் கூடாது. முதலில் அவரின் திருவடிகளைப் பார்த்து வணங்கிய பின்னரே படிப்படியாக அவரின் முகத்திற்கு வர வேண்டும். ⭐ கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட லட்சுமி குபேர பு+ஜையை பு+ச நட்சத்திரம், பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் செய்ய வேண்டும். ⭐ நோய்கள் நீங்கி நலம் பெற புதன்கிழமை, பௌர்ணமி நாட்களில் தன்வந்திரியை வழிபட வேண்டும். ⭐ செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால் எதிரிகள் விலகுவர். ⭐ சிவாலயங்களில் சிவனை தரிசித்த பிறகு சற்று நேரம் கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும். அதன் பின் வீட்டிற்கு செல்ல வேண்டும், சிவகணங்கள் கோவில் வாசல் வரை வருவதாக ஐதீகம். ஆனால் திருமால் கோவில்களில் அவ்வாறு அமர வேண்டிய அவசியமில்லை. விஷ்ணுவின் தூதர்கள் வீடுவரையிலும் நம்மோடு வருவதாக ஐதீகம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

புரட்டாசி வீடு குடி போகலாமா!

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?  தமிழ் மாதங்களில் 6-வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கிறோம். புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும். தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகலாமா? போகக்கூடாதா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கிறது. புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா? புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹhரம் செய்யப்பட்டார். இரணியன் கதை : இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார். இரணியன் ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான். தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தை தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகுவிரைவில் இரணியனை கொன்று, அவர்களை காப்பாற்றுவதாக அருளினார். தேவேந்திரன் இரணியனைப் பழிவாங்க நினைத்து, இரணியனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளை சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். அனைவரும் இரணியனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரணியனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரணியன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். 'தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரணியன், 'அந்த ஹரி எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், 'எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என்று ஒரு தூணைக் காட்டினான். இரணியன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும்கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார். அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரணியன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பு+மியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லாரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

குரு . சுக்கிரன் எதிர் எதிர் நின்றால் என்ன நடக்கும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குரு, சுக்கிரன் எதிர் எதிர் துருவங்கள் சேர்ந்தால், என்ன நடக்கும்?  குருப் பெயர்ச்சி நடந்து முடிந்த நிலையில் குருவின் அருளைப் பெறவேண்டி, பலரும் பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நவகிரகங்களில் குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். இப்படி எதிரெதிர் துருவமாக இருக்கும் இவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் தங்களின் பார்வை மற்றும் சேர்க்கையின் வழியாக என்னவிதமான பாதிப்பை உருவாக்குவார் என பார்ப்போம். குரு, சுக்கிரன் பார்வைகள்... பலன்கள்... இந்த இரண்டு கிரகங்கள் பகையாக இருந்தாலும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். 👉 குரு, ஆட்சி (தனுசு, மீனம்), நட்பு (மேஷம், விருச்சிகம்), சமம் (சிம்மம், கும்பம்) ஆகிய ராசிகளில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் பகை, நீசம் நிலையை அடைந்து இருந்தாலும், சுக்கிரன் தனக்குரிய சுப பலனைத் தருவதில் குறை வைப்பதில்லை. 👉 குரு, பகை ராசிகளான (ரிஷபம், துலாம், மிதுனம்) நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், அரை பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார் 👉 குரு சமமான ராசியில் (கும்பம்) நின்று, 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் சுக்கிரன் முக்கால் பங்கு சுப பலனைத் தருவார். 👉 குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். இதில் சுக்கிரன் ஆட்சி, நட்பு ராசியில் இருந்தால் சுக்கிரனே முழு சுப பலனையும் தந்து விடுவார். 👉 இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் இருவரும் எந்த ராசியில், எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். குரு சுக்கிரன் சேர்க்கையின் பலன்கள்! 👉 குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். 👉 குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள். 👉 குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஒரே ராசியில் இருவர் இருந்தால் என்ன செய்யலாம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் என்ன செய்யலாம்?  🌟 ஏக ராசிப் பொருத்தம் இருந்தால் நல்லதும், கெட்டதும் - ஒரே நேரத்தில் நடக்கும். 🌟 ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும். 🌟 கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. 🌟 பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர். பரிகாரங்கள் : 🌟 ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏக ராசிக்காரர்களாக இருந்தால் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும். 🌟 ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹhர ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு செய்து வணங்கலாம். 🌟 ஏக ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன் அல்லது மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 🌟 ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போதும், மோசமான தசாபுத்தி காலங்களில் அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

மகா புஷ்கரம் விழா ! 144ஆண்டுக்கு பின்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp மகா புஷ்கரம் விழா ! 144 ஆண்டுகளுக்கு பின் !  குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கன்னி ராசியில் இருந்து, காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது, நடத்தப்படுவது தான் காவிரி புஷ்கரம் விழா. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. மகா புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாக கருதப்படும். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். புஷ்கரம் விழா : நவகிரகங்களில் ஒருவரான வியாழன் ஒரு முறை பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். குருவின் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மன், குருவின் முன் தோன்றி அவரின் கோரிக்கையை கேட்டார். குரு, தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். பிரம்மனும் தருவதாக ஒப்புக்கொண்டார். பிரம்மனின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம், 'என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்" என, பிரம்மனிடம் வருந்தி கெஞ்சி கேட்டுக் கொண்டது. இதனால், பிரம்மன், குருவுக்கும், புஷ்கர தீர்த்தத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார். புஷ்கரமானது, குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம் செய்வதுடன், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, புஷ்கரம் விழா, ஒவ்வொரு வருடமும், குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடப்பது வழக்கமானது. குருப்பெயர்ச்சி காலத்தில், அந்தந்த ராசிக்குரிய நதிகளில், 12 நாட்கள் பிரவேசம் செய்வதாக, புராணங்கள் கூறுகின்றன. ராசிகளும் அதற்குரிய புண்ணிய நதிகளும் : மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - பிரம்மபுத்ரா, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - சிந்து, மீனம் - பரணீதா ஆகிய நதிகளில், குரு பகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ, அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அந்த சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒன்றாக இருந்து, மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். சிறப்பு : 144 ஆண்டுகளுக்கு பின் வரும் மகா புஷ்கரம் விழாவை, காவிரி பாயும் எல்லா இடங்களிலும் கொண்டாடலாம். கன்னி, துலாம், விருச்சிக ராசியுடையோர், புனித நீராடுவதால் நல்ல பலன்களை பெறுவர். இவ்விழாவில் சிறப்பு ஹோமங்கள், வேத திருமுறை பாராயணங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், காவிரியில் ஆரத்தி வழிபாடுகள் நடைபெற உள்ளன. பலன்கள் : இந்த நாட்களில், மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால், துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு வாழ்வர். புஷ்கர காலங்களில், காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் மற்றும் பலவகை தோஷங்கள் நீங்கும். இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால், 3.50 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

குருபகவானின் திருதலங்கள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குரு பகவானுக்குரிய திருத்தலங்கள் !  குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தையே, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். வரும் சனிக்கிழமை அன்று நடைப்பெற இருக்கும் குரு பெயர்ச்சி அன்று வழிப்பட வேண்டிய குரு தலங்கள் சிலவற்றை காணலாம். திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது. தென்குடி திட்டை: கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார். பட்டமங்கலம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார். தக்கோலம் : அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப் படுகிறார். ஆலங்குடி : குருபகவானுக்குரிய விஷேசத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு. மயிலாடுதுறை : இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயு+ரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். கும்பகோணம் கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அயப்பாக்கம் : சென்னை அயப்பாக்கத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம். குச்சனு}ர் : தேனி மாவட்டம் குச்சனு}ரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம். திருவொற்றியு+ர் : சென்னை திருவொற்றியு+ர் வடிவுடையம்மன் கோவிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது. இன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் அருள்பாலிக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு பகவான் வீற்றிருப்பார். தட்சிணாமூர்த்தியாகவும் தனி சன்னிதியில் வீற்றிருப்பார். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

சிதம்பர ரகசியம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB சிதம்பர ரகசியம் என்ன?    நவீன விஞ்ஞான நுட்பங்கள் கூட போட்டிபோட முடியாத சிறப்புகளை நம் முன்னோர்கள் தங்கள் அறிவால் உருவாக்கியிருப்பதற்கான சாட்சியே தில்லை நடராஜர் கோவில். சிதம்பர ரகசியம் எல்லோரும் அறியத்துடிக்கும் ஒன்றாகும். அப்படி என்ன ரகசியம் இருக்கு சிதம்பர நடராஜர் கோவிலில்.... 👉 சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும், அரூபமாகவும், அரூவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அரூவுருவம் ஸ்படிக லிங்கம், அரூபம் சிதம்பர ரகசியம். புராணங்கள் சிதம்பர ரகசியத்தை தஹ்ரம் என்று குறிப்பிடுகின்றன. 👉 இந்த ரகசிய ஸ்தானம் சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாசல். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும். 👉 இது எப்பொழுதும் திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். 👉 மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் (அருபமாக) இருக்கிறார் என்பதுதான். 👉 இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும். எந்தப் பலனையும் சிந்திக்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் சித்திக்கும் என்கிறார்கள். 👉 எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் தௌpவு பிறக்கும் என்பதாகும். 👉 சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் ஸ்ரீ சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. 👉 அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட, வெட்ட வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும். 👉 சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் ஸ்ரீசக்கரத்தையும், சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் இருந்து, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, அழித்து அருளிக்கொண்டிருக்கிறார். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

செய்து வரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவது ஏன் ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB செய்துவரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவது ஏன்?   பணியைத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகள் அல்லது சில குறிப்பிட்ட காலங்கள் வரை, அப்பணியில் கடினமாக உழைப்பீர்கள் மற்றும் அதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், நெடுங்காலத்திற்கு அந்த மனநிலையில் இருக்க முடியாது. பணியில் சலிப்பு ஏற்பட என்ன காரணங்கள் எனப் பார்ப்போம். 👉 சந்திரனும் புதனும் தான் நாம் செய்துவரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவதற்கு காரணமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவரும்தான் நமது அன்றாட பணிகளை சிறப்பாக செய்ய உதவி செய்கிறார்கள். 👉 புதன் கிரகமானது பணியில் உற்சாகத்தையும், புதுமையையும் புகுத்தக் கூடியது. அப்படியான பணிக்கு நமது மனதையும், உடலையும் தயார்படுத்துவது சந்திரன். 👉 இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி சோர்வும், சலிப்பும் ஏற்படும். இது வேலை மாறுதல் போன்றவற்றைக் கூட ஏற்படுத்தக் கூடும். 👉 ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்துவிட்டால் தொடர்ந்து அந்தப் பணியை நீண்ட காலமாகச் செய்வார்கள். 👉 சந்திரன் உச்சமாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் வெவ்வேறு நிலைகளை அடைவார்கள். இவர்களுக்கு குறிக்கோளும் உருவாக்கமும் ஒன்றாகவே இருக்கும். 👉 எந்த பணியைத் தொடங்குகிறார்களோ அதே பணியில் உச்சத்தை எட்டுவார்கள். இது சந்திரனின் பலம்தான். இதில் புதனும் வலுவடையும்போது சலிப்பும் சோர்வும் இருக்காது. 👉 இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகத்தில் வலுவிழக்கும்போதோ அல்லது இந்த இரண்டு கிரகங்களுக்கு எதிரான கிரகங்களின் பார்வைக்குள் வரும்போதோ அவர்களுக்கு சோர்வும் சலிப்பும் தானாகவே வரும். 👉 அப்போதுதான், வேறு வேலைக்கு மாறினால் என்ன? வேறு ஏதாவது முயற்சியில் 👉 ஏனெனில், இந்த இரண்டு கிரகங்களையும் தாண்டிய ஒரு யோக திசை வரும்போது, இப்போதுள்ள பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறி செழிப்பான ஒரு நிலைக்கு கொண்டு செல்லலாம். ஆனால் இதனை ஒரு உறுதியான அறிகுறியாகக் கொள்ள முடியாது. பரிகாரம் : 🌿 மாதத்தில் முதல் சனிக்கிழமை நவக்கிரக சன்னதிக்கு சென்று, மூன்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வழிபட வேண்டும். 🌿 திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள வில்வமரத்திற்கு மாத பிறப்பு தினங்களில் அரைத்த மஞ்சளை மரத்திற்கு பு+சி வணங்கி வலம் வர வேண்டும். 🌿 குலதெய்வ கோவிலுக்கு சென்று வணங்கி வரவேண்டும். குலதெய்வத்திற்கு ஏதாவது குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இவைகளை முறைப்படி செய்தால் நிலைத்த உத்தியோகமும், நிலைத்த தொழிலும் அமையும். 🌿 அனுமன் மற்றும் பைரவரை வழிபட்டு வந்தால் நன்று. அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்தும், பைரவருக்கு 27 மிளகுகளை வெள்ளை துணியில் முடிந்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வரலாம். 🌿 தினசரி காலையில் சு+ரியன் உதிக்கும் திசை பார்த்து எழ வேண்டும். பின்பு காலையில் எழுந்து குளித்தவுடன் சு+ரிய பகவானை வழிபட்டு வரவேண்டும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கண்களின் நிறமும் குணமும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கண்களின் நிறத்தை வைத்து குணத்தை அறியலாம்.!!  ✴ மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். ஒருவரின் மனநிலையை அறிய அவர்களின் கண்களை வைத்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். நம் கண்களின் மூலமாகவே அன்பு, பாசம், கவனிப்பு, காதல், அலட்சியம், வெறுப்பு என பல விதமான உணர்வுகளை காட்டலாம். நம்முடைய தனித்துவம் மற்றும் பிரத்தியேக குணத்தை காண நம் கண்களின் நிறம் நமக்கு உதவுகிறது. கண்களின் நிறத்தை வைத்து அவர்களின் பொதுவான குணங்களை பற்றி காண்போம். கருப்பு நிற கண்கள் : ✴ கருப்பு நிற கண்கள் உள்ளவர்கள் ரகசியமிக்கவர்களாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். எளிதாக யாரையும் நம்பிவிட மாட்டார்கள். ஆனால் நண்பராகி விட்டால், அவர்களை கண்டிப்பாக நம்பலாம். பொறுமை இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நேர்மறையான நம்பிக்கை அதிகளவில் இருக்கும். தங்க நிற கண்கள் : ✴ தங்க நிறக் கண்களை கொண்டவர்கள் யாருடனும் ஒன்றாமல் இருப்பார்கள். அழகுடையவர்களாகவும், அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னிச்சையாக இருப்பதால் இவர்களுடன் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். பழுப்பு நிற (பிரவுன்) கண்கள் : ✴ பலருக்கும் உள்ள பொதுவான கண்களின் நிறம் பழுப்பு நிறமாகும். பழுப்பு நிற கண்கள் கொண்டவர்கள் நல்ல குணத்துடன் பாசமிக்கவராக இருப்பார்கள். அனைவரையும் ஈர்க்கும் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் இருப்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கும். நடக்க போவதை எண்ணி அவர்கள் மிகவும் அரிதாகவே கவலை கொள்வார்கள். அதே மாதிரி நண்பர்கள் அமைத்துக் கொள்வதிலும் அவர்கள் கில்லாடி ஆவார்கள். நீல நிற கண்கள்: ✴ உலகத்தில் பலருக்கும் பிடித்த கண்களின் நிறம் என்றால் அது நீல நிறம் என்று கூறலாம். பொதுவாகவே நீல நிற கண்களை கொண்டவர்கள் அழகாகவும், அன்பாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்களுக்கும், பிறருக்கு தேவைப்படும் போது கைக்கொடுப்பதிலும் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கண்களின் நிறம் அவ்வளவு அழகாக இருப்பதால், பார்ப்பதற்கும் வசீகரத்துடன் இருப்பார்கள். நல்ல நட்புடன் பழகுவார்கள். சாம்பல் நிற கண்கள் : ✴ சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அமைதியானவர்களாகவும், புத்திசாலித்தனமாகவும் மற்றும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக விளங்குவார்கள். சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அவர்களின் உட்புற வலிமை, பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை அதிகமாக பேசுவார்கள். அவர்கள் மிகப்பெரிய தலைவர்களாக இருப்பார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

உங்களுடைய விதி ரேகை என்ன சொல்கிறது ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB உங்களுடைய விதி எப்படி இருக்கு....!   ஒரு மனிதனின் ராசியை வைத்து அவன் வாழ்க்கை, குணாதிசயங்கள், அதிர்ஷ்டம் போன்றவற்றைக் கணிப்பது போல அவனுடைய ரேகையை வைத்தும் கூறப்படுகிறது. உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை (அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்பிற்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். விதி ரேகை ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும் அதை பற்றிப் பார்ப்போம்.  👉 விதி ரேகை தௌpவாக அமைந்து வெட்டுக்குறி ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். 👉 விதி ரேகை நடுவிரலின் கீழிலிருந்து ஆரம்பமானால் அவர்கள் எல்லா விஷயங்களிலும் சுதந்திரமாக இருப்பார்கள். உறுதியாக செயல்படுவார்கள். 👉 உயிர் ரேகை வளைவிலிருந்து விதி ரேகை தொடங்கினால் குடும்ப மரபுகளை சரியாக பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். 👉 விதி ரேகை ஆயுள் ரேகையிலிருந்து தொடங்கினால் வாழ்க்கை பாதையை அவர்களே முடிவெடுத்துக் கொள்வார்கள். 👉 விதி ரேகையின் நடுவில் விட்டு விட்டு இருந்தால் வேலையை அடிக்கடி இழப்பவர்களாக இருப்பார்கள். 👉 விதி ரேகை ஆரம்பத்தில் மீன் ரேகை இருந்தால் அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள். 👉 நடுவிரலின் கீழ் பக்கத்தில் விதி ரேகை முடிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள். 👉 இரு ரேகைகள் மேலிருந்து கீழே பிரிந்தால் அவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள். 👉 ஒருவருக்கு ஓரே மாதிரியான கைரேகைகள் இருந்தால் வாழ்க்கையில் இதை தான் நாம் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள். 👉 கையின் கீழிலிருந்து ரேகை ஆரம்பித்து விளிம்பு பகுதியில் முடிந்தால் வாழ்க்கையின் சுய தேவைகளை அவர்களே பு+ர்த்தி செய்து கொள்வார்கள். 👉 கைரேகையானது கிளைகளாக பிரிந்து சென்றால் இரண்டு விதமான வாழ்க்கை நிலைமை அமையும். ஒரு செயலில் எவ்வளவு போராட்டம், பிரச்சனை வந்தாலும் கடைசியில் அவர்கள் வெல்வார்கள் அல்லது வெற்றி பெற்றவர்களை அவர்கள் சந்தித்த பின் அவர்களின் வெற்றி அமையும். 👉 கை மணிக்கட்டிலிருந்து ரேகை ஆரம்பித்தால் பணம் புழங்கும், பொருளாதார ரீதியில் நன்றாக இருப்பார்கள். 👉 சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கும்பராசியின் பொத

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கும்பம்  💐 ராசி மண்டலத்தில் 11வது ராசி கும்ப ராசியாகும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். அவிட்டம் 3,4, சதயம், பு+ரட்டாதி 1,2,3-ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆவர். கும்ப ராசியின் வேறு பெயர்கள் : 💐 குடம், சால், சாடி நட்பு ராசிக்காரர்கள் : 💐 மிதுனம், துலாம், தனுசு, மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் நட்பு ராசிக்காரர்கள் ஆவர். குணங்கள் : 💐 கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள். தங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள். நேர்மையானவர்கள். மன பக்குவம் கொண்டவர்கள். நியாயத்தை வெளிப்படையாக பயமின்றி பேசுபவர்கள். அமைதியான தோற்றம் கொண்டவர்கள். அன்புக்கு கட்டுப்படுபவர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள். உண்மை பேசுவதையே அதிகம் விரும்புவார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். 💐 கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், புகழும் பெற்று ஜொலிப்பார்கள். ஆனால் குடும்ப வாழ்வில் நிம்மதியற்ற நிலையே காணப்படும். ஏனெனில் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் வாழ்க்கை துணையினால் செல்வ செழிப்பு ஏற்பட்டாலும், இருவருக்கும் கருத்து ஒற்றுமை என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இவர்களிடம் சேமிக்கும் பழக்கம் குறைவாகத்தான் இருக்கும். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். 💐 இவர்கள் படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற தொழிலுக்கும் சம்பந்தமில்லாத வேலைதான் பார்ப்பார்கள். சொந்த தொழில் புரிவதையே அதிகம் விரும்புவார்கள். சொந்த தொழில் செய்து மிகப் பெரும் செல்வந்தராக உயர்வார்கள். எந்த வேலையையும் மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். ஒருவரை மனதிற்குப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். பிடிக்காவிட்டால் ஒதுங்கி விடுவர். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கேற்றவாறு தன்னுடைய சொந்த முயற்சியால் ஆடம்பர வாழ்க்கை வாழ தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். அதிர்ஷ்டம் அளிப்பவை : எண் - 5,6,8 நிறம் - வெள்ளை, நீலம் கிழமை - வெள்ளி, சனி கல் - நீலக்கல் திசை - மேற்கு இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

மீனராசியின் பொதுவான பலன்கள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மீனம் !  🌼 ராசி மண்டலத்தில் மீன ராசி 12வது ராசியாகும். மீன ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். பு+ரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்காரர்கள் ஆவர். மீன ராசியின் வேறு பெயர்கள் : சலசம், சலசரம், அயிரை, கயல் நட்பு இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம். பொதுவான குணங்கள் : 🌼 மீனராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரக்க குணம் கொண்டிருப்பார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள். திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவார்கள், எதையும் திட்டமிட்டு ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்யக்கூடியவர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் பெற்றிருப்பார்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். புகழ்ச்சிக்கு மயங்கி விடுவார்கள். பேச்சைக் காட்டிலும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். 🌼 மீன ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளை சொல்லுவதில் வல்லவர்கள். இவர்கள் தான தர்மம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் அதிக லாபம் ஈட்டும் திறமை பெற்றவர்கள். தன் சொந்த முயற்சியால் கிடைத்த பணத்தைக் கொண்டு சொத்து சேர்ப்பார்கள். சுகபோகமாக வாழ்வதையே விரும்புவார்கள். 🌼 இவர்கள் அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்புகளை பெறுவர். எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் சிறந்து விளங்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கைப் பிறகு செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். இவர்கள் மிகப்பெரிய அதிகாரியாகவும், ஆராய்ச்சியாளராகவும், போதிக்கக் கூடியவராகவும், கல்வித் துறை மற்றும் வழக்கறிஞர் துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அடக்கத்தில் சிறந்தவர்கள். வாழ்க்கையில் புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்வார்கள். அதிஷ்டம் தரக் கூடியவைகள் : எண் - 1,2,3,9 நிறம் - மஞ்சள், சிவப்பு கிழமை - வியாழன், ஞாயிறு கல் - புஷ்பராகம் திசை - வடகிழக்கு இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

முன்னோர்களை வழிபட சிறந்த நாள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம்....! மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விஷேசமானதாகும். மகாளய அமாவாசைக்கு முன்பு மகாளயபட்சம் என்று ஒன்று ஆரம்பமாகும். இது எப்போதும், ஆவணி மாதத்தில் பௌர்ணமி முடிந்த மறுநாள் ஆரம்பமாகிறது. இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிற வரை (06.09.2017 - 19.09.2017) - அதாவது பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகாளய பட்சம் இருக்கும். மகாளய பட்சத்தின் சிறப்பு : 🌘 மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். 🌘 இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹhபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும். வேத நு}ல்கள் சொல்லும் கதை: 🌘 பல தெய்வீக நு}ல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பு+லோகத்திற்கு வருகின்றனர். 🌘 இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா? 🌘 இந்த காலத்தில் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார். ஏனென்றால் இந்த காலப் பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. 🌘 சிரார்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பது. இந்நாளில் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும் ? 🌘 இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். 🌘 முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். 🌘 எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, 'காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பு+ஜையைச் செய்யலாம். இந்நாளில் முன்னோர்களை முறையாக வணங்கி பரிபு+ரண அருளை பெறுவோம்....! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள் ! 🌟 பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். 🌟 மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது. 🌟 நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். 🌟 இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும். எந்த திதியில் என்ன பலன் : 🌟 முதல்நாள் அன்று பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். 🌟 இரண்டாம் நாள் அன்று துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள். 🌟 மூன்றாம் நாள் அன்று திரிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 🌟 நான்காம் நாள் அன்று சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம். 🌟 ஐந்தாம் நாள் அன்று பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். 🌟 ஆறாம் நாள் அன்று சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும் புகழும் கிடைக்கும். 🌟 ஏழாம் நாள் அன்று சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்யோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். 🌟 எட்டாம் நாள் அன்று அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும். 🌟 ஒன்பதாம் நாள் அன்று நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 🌟 பத்தாம் நாள் அன்று தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 🌟 பதினொன்றாம் நாள் அன்று ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள். 🌟 பனிரெண்டாம் நாள் அன்று துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். 🌟 பதின்மூன்றாம் நாள் அன்று திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். 🌟 பதினான்காம் நாள் அன்று சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும். 🌟 அடுத்து பதினைந்தாம் நாள் அன்று மகாளய அமாவாசை நாளாகும். 🌟 மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

குரு பகவானி ஆசி பெறும் முறைகள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குரு பகவானுடைய ஆசியை பெறும் முறைகள்.....!!    நவக்கிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். 'குரு இருக்கும் இடம் பாழ். பார்க்கும் இடம் விருத்தி" என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குரு நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்க வழிமுறைகள் சில.... 🌸 அன்றாடம் தலை முழுகிக் குளித்துத் தூய உடைகளை அணிந்து, நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும். 🌸 அதிகாலையில் எழுந்து நீராடி குரு வணக்கம், குரு காயத்ரி, குரு ஸ்துதி, குரு த்யானம், குரு அஷ்டாதச நாமார்ச்சனை (18 நாமங்கள்), குரு அஷ்டோத்ரசத நாமாவளி (108 நாமங்களின் வரிசை) ஆகியவற்றை உச்சரித்து குருபகவானை வழிபடலாம். 🌸 வீட்டிலிருந்தபடியே குருபகவானை நினைத்து வணங்கி, கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல். குருவிற்கு வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் : 🌸 வியாழக்கிழமை தோறும் சிவன்கோவில் சென்று, அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதட்சணாமூர்த்தி சுவாமிக்கு அர்ச்சனை அல்லது கற்பு+ர ஆரத்தி செய்து வணங்கி வருவது நல்லது. 🌸 ஆலயங்களில் நவக்கிரக மூர்த்திகளிடையே உள்ள குருவுக்கு வியாழனன்று கொண்டைக்கடலை மாலை சாற்றி, முல்லைப்பு+, சாமந்திப்பு+ மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது நன்மை தரும். 🌸 வேக வைத்த கொண்டைக்கடலை சிறிதளவு கலந்த சாதத்தைக் காகத்திற்கு வியாழக்கிழமைகளில் வைப்பதும் நல்லது. 🌸 வியாழக்கிழமை தோறும் கொண்டைக்கடலை சுண்டல், மஞ்சள் வாழைப்பழம், தேன், சர்க்கரை, கல்கண்டு மற்றும் இதர இனிப்புப் பொருள்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை குருபகவானை நினைத்து அவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். 🌸 வியாழக்கிழமையில் மஞ்சள் நிறத் துணியில், கொண்டைக்கடலை சுண்டல், மஞ்சள் வாழைப்பழம், முல்லைப்பு+ அல்லது சாமந்திப்பு+, மூன்று கூட்டு எண்ணிக்கையுள்ள பணம் (ரூபாய் 3, 12, 21, 30) தாம்பு+லம் ஆகியவற்றை முடிப்பாக வைத்து வயது முதிர்ந்த பிராமணருக்கு குரு ஓரை நேரமாகிய காலை 6 - 7-க்குள் அரசமரத்தடியின் கீழிருந்து தானம் செய்ய வேண்டும். குரு பகவான் அருள் பெற்ற ஸ்தலங்கள் : 🌸 நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலுள்ள குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் 🌸 தஞ்சாவு+ரில் உள்ள திட்டையில் (தென்குடித் திட்டையில்) உள்ள ஸ்ரீ பசுபதிநாதர் கோவில் 🌸 சென்னை அருகில் பாடியில் உள்ள, வலிதாயநாதர் கோவில் 🌸 திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் கோவில் ஆகியவை குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய ஸ்தலங்களாகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

குபேர மூளையின் நன்மை தீமைகள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB தென்மேற்கு பகுதியின் நன்மை, தீமைகள்..!  தொகுத்தவர் வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன் 📞 82205-44911 🏠 நாம் குடியிருக்கும் மொத்த வீட்டு அமைப்பில் தென்மேற்கு என்பதை கன்னி மூலை என்றும், குபேர மூலை என்றும் பல பெயர்களில் பல ஊர்களில் குறிப்பிடுகிறார்கள். இந்த தென்மேற்கு பகுதி முழுவதும் ஆண் மகனுக்கு சொந்தமான இடம். ஒரு ஆண்மகனை அல்லது அந்த வீட்டின் கணவனை மனிதனாக மதிக்கக்கூடிய சு+ழலை ஏற்படுத்துவதே இந்த தென்மேற்கு பகுதிதான். உத்யோகம்தான் புருஷலட்சணம் என்போம். அப்படி சிறப்பை கொடுப்பதும், பெயர் புகழைக் கொடுப்பதும், குழந்தை பாக்கியத்தை கொடுப்பதும், பெயர் புகழை கொடுப்பதும் இந்த தென்மேற்கின் தன்மையே. இவ்வளவு தன்மை வாய்ந்த இந்த இடத்தை எப்படி பயன்படுத்துவது அல்லது எப்படி வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம். 1. மொத்த வீட்டு அமைப்பில் தென்மேற்கு பகுதி எப்பொழுதும் மாஸ்டர் பெட்ரூமாக இருப்பது சிறப்பு. 2. மொத்த கட்டிட அமைப்பு எப்பொழுதுமே சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது. 3. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதியில் எந்த ஒரு காலியிடமும் வரக்கூடாது. அதாவது வாசல் வரக்கூடாது. 4. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதி வளைந்த நெலிந்த அமைப்பில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது. 5. தென்மேற்கில் பு+ஜை அறை கூடாது. 6. தென்மேற்கில் சமையலறை கூடாது. 7. தென்மேற்கில் கார்பார்க்கிங், போர்டிகோ அமைப்பு கூடாது. 8. தென்மேற்கு டாய்லெட், பாத்ரூம் அமைப்பு கூடாது. 9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு கூடாது. 10. தென்மேற்கு பெட்ரூமை இளம் தம்பதியினருக்கு கொடுப்பது சிறப்பை தரும். 11. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை குடும்ப உறுப்பினர்களை தவிர மூன்றாவது நபர்களை தங்க வைத்தால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் வந்து சேரும். 12. தென்மேற்கு பகுதியே ஒரு வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அந்த பகுதி எப்பொழுதுமே மூடிய அமைப்பில் இருப்பது சிறப்பு. 🏠 நமது வாழ்வில் ஆயுளை தீர்மானிப்பதும், பொருளாதாரத்தை தீர்மானிப்பதும் வீட்டு அமைப்பே என்பதை யாவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த வீட்டை உருவாக்கும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ அல்லது மாற்றி அமைக்கும்போதோ சிறந்த வாஸ்து நிபுணரின் உதவியை கேட்டு செய்வது மேலும் சிறப்பை தரும். 🏠 ஒரு கட்டிடத்தை தவறாக கட்டிவிட்டால் அது தனக்கு உண்டான தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கும். அதை புரிந்து கொண்டு அந்த தவறான அமைப்பை சரி செய்வதே சிறப்பை தரும். அதை தவிர்த்து பரிகாரம் எவ்வளவு செய்தாலும் பலன் தராது. வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன் 📞 82205-44911 ழூதொடர்புகொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

இருதார திருமணம் யாருக்கு அமையும்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB இரு தார திருமணம் யாருக்கு அமையும்..?  👥 திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இல்லறத்தின் இனிய வரம். ஆனால் இது எல்லோருக்கும் இனிமையாக அமைவதில்லை. 👥 பொதுவாக ஜாதக நிலையில் குடும்பஸ்தானமும், களத்திரஸ்தானமும் முக்கிய நிலைகளாகும். இவற்றுடன் அமையும் கிரக சேர்க்கையினால் குடும்பத்தில் பல குழப்பங்கள் நடைபெறுகிறது. 👥 உறவுகளில் இனிய பந்தமான இல்லற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது? 👥 பொதுவாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இரு தாரப்பலன் அமையும் நிலையிருக்கும். இதற்கான காரணம் சந்திர சுக்கிர சேர்க்கை ஆகும். 👥 துலாம் ராசிக்கு அடுத்த ராசியாக விருச்சிக ராசியிலேயே சந்திரன் நீச்சம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெறுவதும் இரண்டு மனைவிகள் அமையும் நிலை ஏற்படுகிறது. 👥 மேலும் சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதி கிரகமான செவ்வாய், ராகு, குரு ஆகிய கிரகச் சேர்க்கை இதற்கு காரணமாகிறது. 👥 எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகிறது. 👥 ஆனால் இது எல்லோருக்கும் அமையாது. குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தாரப் பலன்கள் அமையும். இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்? 👥 ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் சு+ரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலை அமைவதும், நீச்ச நிலை பெறுவதும் இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும். 👥 அதேபோல சு+ரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தாரப் பலனை கொடுக்கும். 👥 ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்கிரன், சு+ரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

எது முக்கியம் குலதெய்வ வழிபாட இஷ்ட தெய்வ வழிப்பாட ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குலதெய்வமும், இஷ்ட தெய்வமும்.! 💥 தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம் குல தெய்வம் எனப்படும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட முறையில் விரும்பி வழிபடும் தெய்வம் இஷ்ட தெய்வம் எனப்படும். 💥 குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். 💥 இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால் முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது. குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ? 💥 ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பு+ர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் தீர்க்கும். 💥 ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். 💥 ஒருவர் எவ்வளவு பு+ஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும், குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. 💥 பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். 💥 உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம். 💥 பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குகிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும் திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வழிபாடு செய்து வந்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்ககூடிய ஆற்றல் கிடைக்கும். இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் : 💥 நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைப்பதில்லை. 💥 குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படும். 💥 குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கணவன் மனைவி அமையும் இடம் பக்கமா ? தூரமா ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கணவன்ஃமனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா?   திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். 🌷 வெற்றிகரமான திருமணம் என்பது சரியான துணையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல - சரியான துணையாக இருப்பதும் கூடத்தான். இவ்வாறு நமக்கு அமையும் துணை எவ்வளவு தூரத்தில் இருந்து வரும் என்பது நமக்கு தெரிவதில்லை. 🌷 பலரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மாப்பிள்ளையோஃபெண்ணையோ தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அவருக்கு பக்கத்து வீட்டிலேயே வரன் அமைந்து விடும். 🌷 அப்படி உங்களுக்கு அமையும் வரன் பக்கத்திலா? அல்லது தூரத்திலா? என்பதை அறிவது எப்படி? 🌷 ஒரு ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அல்லது கணவனின் பிறந்த வீடு ஜாதகர் பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்பதை ஜாதகரின் குருவுக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து கண்டறியலாம். 🌷 அதே போல ஜாதகிக்கு சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து கண்டறியலாம். ஆண் ஜாதகம் : ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம். 1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும். 2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். பெண் ஜாதகம் : இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம். 1. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும். 2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். 🌷 7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். 4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும். 9ஆம் பாவத்திலோ சு+ரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவில் அமையும். 🌷 5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தமானால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பு+ர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

வடமேற்கு பகுதி அமைப்பின் நன்மை தீமைகள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB வட மேற்கு பகுதி அமைப்பின் நன்மை தீமைகள் !  தொகுத்தவர் வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன் 📞 82205-44911 🏠 ஒரு மனிதனின் நேர்மையை தீர்மானிப்பதும், மனநிலையை தீர்மானிப்பதும் நமது வீட்டின் வடமேற்கு பகுதி. இந்த பகுதியை வாயு மூலை என்றும் கூறுவார்கள். அறிவார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் கலைநயம் மிக்க வேலைகளை கற்றுக் கொள்ளவும், வெளி உலக தொடர்பை மிக பெரியதாக அமைத்துக்கொள்ள உதவுவதும் இந்த வடமேற்கு பகுதிதான். 🏠 பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலைக்கும், அதே பொருளாதாரத்தில் மிக மோசமான நிலைக்கும் இட்டு செல்வது இந்த வடமேற்கு பகுதிதான். 🏠 அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வடமேற்கு பகுதியை எவ்வாறு அமைத்து கொண்டால் நமக்கு நன்மை விளைவிக்கும். தவறாக அமைத்தால் தீமை விளைவிக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம். வட மேற்கு பகுதி அமைப்பு : 1. கழிவறைகள் வரலாம். 2. பு+ஜை அறைகள் வரலாம். 3. சமையல் அறைகள் வரலாம். 4. உறவினர்கள் தங்கும் அறைகள் வரலாம். 5. குழந்தைகள் தங்கும் அறைகள் வரலாம். 6. ஹhல் வரலாம் (ர்யடட). வரக்கூடாதவைகள் : 1. மாஸ்டர் பெட்ரூம் (ஆயளவநச டீநன சுழழஅ) 2. உள்மூலை படிக்கட்டு 3. ர்iபா ஊநடைiபெ ரூ டுழற ஊநடைiபெ 4. தண்ணீர் தொட்டி அமைப்பு 5. கார் பார்க்கிங் 🏠 இதுபோல பல தவறான அமைப்புகள் உண்டு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர்களின் உதவியால் சரியாக அமைத்துக் கொள்வது நல்லது. வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன் 📞 82205-44911 ழூதொடர்புகொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

குணத்தை சொல்லும் உள்ளங்கை

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குணத்தை சொல்லும் உள்ளங்கை..!  🌿 ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு வண்ண அமைப்பில் இருக்கும். எனவே உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து அவர்களின் குணத்தைப் பற்றி பார்க்கலாம். ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை : 🌿 இந்த நிறம் கொண்டவர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாக இருப்பர். பணத்திலும், பதவியிலும் அதிகமான ஈடுபாடு உடையவர்கள். பேச்சில் கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்பவர்களாக இருப்பார்கள். சிவப்பு நிற உள்ளங்கை : 🌿 குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை கொண்டவர்கள், அதிகமாக கோபப்படக் கூடியவர்களாக இருப்பர். ஆனால், அதற்கு சமமாக அதிக பற்றும் பாசமும் உடையவர்களாக திகழ்வர். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், எதிலும் அவசரப்படுவார்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை : 🌿 ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், பிறருக்காக வாழக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள் மற்றும் நம்பத்தகுந்தவர்களாக இருப்பர். மஞ்சள் நிற உள்ளங்கை : 🌿 இவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு இருக்கும். அதிகம் பயந்த சுபாவம் உடையவர்கள். மனோபலம் இல்லாமல் பலவீனமானவர்களாக இருப்பர். அறிவாற்றல் குறைவாகவும், சிறிது சோம்பேறித்தனமும் இவர்களிடம் இருக்கும். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். உள்ளங்கையின் அகலத்தை வைத்து குணத்தை பார்ப்போம். மிக அகலமான உள்ளங்கை : 🌿 நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்கள் அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். அகலமான உள்ளங்கை : 🌿 கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். குறுகலான உள்ளங்கை : 🌿 மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள். மென்மையான உள்ளங்கை : 🌿 உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இதுபோல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார். கடினமான உள்ளங்கை : 🌿 உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

திருமண தடைக்கு காரணம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB திருமண தடங்கலுக்கான காரணம் !  🌠 எந்த ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு திருமண விஷயத்தில் பல நேரங்களில் தடைகள் உண்டாகின்றன. 🌠 ஜாதக ரீதியாக ஒருவருக்கு திருமண தடை, கால தாமத திருமணம் போன்றவற்றுக்கு, கிரகங்கள் அமர்ந்த நிலை, சேர்ந்த நிலை, பார்வையின் நிலை, தோஷங்கள், போன்ற பல காரணங்கள் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷத்தால் மட்டும் திருமணம் தாமதம் ஆவதில்லை. 🌠 7ஆம் இடத்தில் சனி இருந்தால், 7ஆம் இடத்தை சனி பார்த்தால், லக்னத்தில் சனி இருந்தால், 7க்குடையவனுடன் சனி இருந்தால், 7க்குடையவனை சனி பார்த்தால், சுக்கிரனுடன் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் நிலை ஏற்படும். ❇ மேலும், கீழ்கண்ட கிரகநிலைகள் ஜாதகத்தில் அமைந்தால் திருமணம் ஏற்படுவதிலும், ஸ்த்ரி சுகம் ஏற்படுவதிலும் பெரும்பாலும் தடங்கல் ஏற்படும். 1. சப்தமாதிபதி சுபசம்பந்தமின்றி நீசம் அல்லது அஸ்தங்கதனாகி 6,8,12-ல் இருந்தால் ஜாதகருக்கு திருமண தடை ஏற்படும். 2. 7ம் அதிபதி 12ல் இருந்து, லக்னாதிபதி அல்லது ஜன்ம ராசியாதிபதி 7ல் இருந்தாலோ விவாகம் இல்லை. 3. சுக்கிரன் சனி சேர்ந்திருப்பது அதற்கு 7ல் சனி செவ்வாய் சேர்ந்திருந்தால் திருமணம் நடக்காது. 4. சுக்கிரன் செவ்வாய் 7ல் இணைந்தால் திருமணம் ஏற்படுவது கடினம், ஆனால் ஜாதகர் ஸ்த்ரிலோகனாக இருத்தல் கூடும். 5. சுக்கிரன், செவ்வாய் இணைந்து 5 அல்லது 9ல் இருந்தால் விவாகத்தில் தடங்கல் ஏற்படும். 6. சுக்கிரனுடன் பாபக்கோள் யாராவது இணைந்து 7,5,9 ல் இணைந்தால் திருமணம் நடப்பது கடினம். 7. சுக்கிரன், சனி, புதன் இவர்கள் மூவரும் நீச நவாம்சங்களில் இருந்தால் மனைவி மக்களின்றி தனியாய் இருப்பார். 8. 7,12ம் பாவங்களில் இரண்டு இரண்டு பாபக்கோள்கள் இருந்து, 5ல் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடக்காது. 9. 7ம் பாவத்தைச் சனி பார்த்தாலும் திருமணத் தாமதம் உண்டாகும். 10. கடக லக்னத்தில் 7ல் குரு நீசம் பெற்றாலும் திருமண தாமதம் ஏற்படும். 11. சு+ரியன், புதன் இவர்கள் லக்னத்திலிருந்து குரு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகும். 12. பெண் ஜாதகத்தில் 7ம் அதிபதியுடன் சனி சேர்ந்தால் திருமணத்தில் தாமதம் உண்டாகும். 🌠 வீட்டிற்கு வடக்கு திசையில் தேவையற்ற பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் இருந்தாலும், திருமண தடை உண்டாகும். வீட்டின் வடக்கு பக்க சுவரில் விரிசல் இருந்தால், திருமண தடை உண்டாகும். 🌠 மேலும், ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன என்பதை சரியாக தெரிந்துகொண்டு, அதற்கு உண்டான பரிகாரங்களை செய்யும் பொழுது ஜாதகருக்கு திருமணம் விரைவாக சரியான நேரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

எநத நட்சத்திரத்தில் என்ன சுபகாரியம் செய்யலாம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம்?  ⭐ எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு நாம் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம். எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுவன பற்றி தெரிந்துக் கொள்வோம். ⭐ சுப காரியங்களை செய்வதற்கேற்ப நட்சத்திரங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ⭐ ஊர்த்துவ நட்சத்திரங்கள் ⭐ அதோமுக நட்சத்திரங்கள் ⭐ திருயக்முக நட்சத்திரங்கள் ஊர்த்துவ நட்சத்திரங்கள் : ⭐ ரோகிணி, திருவாதிரை, பு+சம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் ஊர்த்துவ நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் நடைபெறும் நாட்கள் மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ மேல்மாடம், மதிற்சுவர் கட்டலாம் ⭐ கொடிமரம் வைக்கலாம் ⭐ கொட்டகை, பந்தல் போடலாம் ⭐ வாசற்படி கட்டுவது நன்று. அதோமுக நட்சத்திரங்கள் : ⭐ பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பு+ரம், விசாகம், மூலம், பு+ராடம், பு+ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அதோமுக நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ கிணறு, குளம் வெட்டலாம் ⭐ புதையல் தேடலாம் ⭐ களஞ்சியம், வேலி போன்றவற்றை அமைக்கலாம் ⭐ கணிதம் பயிலலாம் ⭐ கிரகப்பிரவேசம் செய்வது நன்மையைத் தரும். திரியக்முக நட்சத்திரங்கள் : ⭐ அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பு+சம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் திரியக்முக நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்கள் சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ பிராணிகளை வாங்கலாம் ⭐ விவசாயம் செய்ய தொடங்குவது நன்மையான பலன்களை தரும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB