மிதுனராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மிதுனம் !  🌟 ஜோதிட சாஸ்திரத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள மிதுன இராசியின் குணங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியத்தை பற்றி இன்று பார்ப்போம். 🌟 மிகவும் தைரியசாலியாக விளங்கும் மிதுன இராசியின் அதிபதி புதன் ஆவார். மிருகசீரிஷத்தின் 3, 4, பாதங்களும், திருவாதிரையும், புனர்பு+சத்தின் 1, 2, 3 பாதங்களும் இதற்குள் அடங்கும். புதன் இதை ஆட்சி செய்கிறார். மிதுன இராசியின் வேறு பெயர்கள் : 🌟 வாழ்வு, இரட்டை, பாட்வன், பாடவை, வீணை, யாழ் மற்றும் புதுமகளிர் என்பது மிதுன இராசியின் வேறு பெயர்கள் ஆகும். நட்பு இராசிகள் : 🌟 மிதுன இராசிக்காரர்களுக்கு ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம் இராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பர். மீன இராசிக்காரர்கள் இவர்களுக்கு தொல்லை தரக்கூடியவர்களாக இருப்பர். குணங்கள் : 🌟 மிதுன இராசிக்காரர்கள் சுறுசுறுப்பாகவும் மீன் போன்ற அழகிய கண்களை கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்கள் எப்போதும் சோம்பலாக பொழுதை கழிக்கமாட்டார்கள். நல்ல நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவர்கள் மூளையே மூலதனமாக கொண்டு முன்னேற்றம் அடைவார்கள். இவர்களின் பேச்சிலும் செயலிலும் தைரியம் அதிகமாக காணப்படும். அறிவு பு+ர்வமான பேச்சும் செயலும் இருக்கும். இவர்களுக்கு கல்வி கற்பதில மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பர். 🌟 மிதுன இராசிக்காரர்கள் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், அடுத்தடுத்த பதவி உயர்வு என்றிருந்தாலும், வீட்டில் பிரச்சனையும் போராட்டமுமாக தான் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சில நேரங்களில் தவறாகிவிடும் எனவே இவர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து முடிவு எடுத்தால் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மிதுன இராசிக்காரர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இவர்களை பற்றி எளிதில் அறிய முடியாது. இவர்கள் எளிதில் பிறரை நம்ப மாட்டார்கள். அன்பிற்கு கட்டுப்படுபவராக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களின் ஆலோசனையினை மட்டுமே எடுத்துக் கொள்வர். 🌟 இந்த இராசிக்காரர்களுக்கு கூட்டுத்தொழில் சிறப்பாக அமையாது. எதுவாக இருந்தாலும் தனியாளாக நின்று போராடினால் நல்லது. வெளிவட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் இடம், பொருள், ஏவல் அறிந்து எல்லாவற்றையும் செய்வீர்கள். இவர்களுக்கு திருமண வாழ்வு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். இந்த இராசிக்காரர்களுக்கு அவர்கள் விரும்பியது போல் நல்ல துணை அமையும். இவர்கள் கொஞ்சம் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்கு புத்திர பாக்கியமும் நல்ல முறையாக அமையும். அதிர்ஷ்டம் தருபவை : அதிர்ஷ்ட நாள் - புதன், வியாழன் அதிர்ஷ்ட எண் - 5 அதிர்ஷ்ட கல் - மரகத கல் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment