ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
கேட்டை நட்சத்திர பாதிப்பு
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
கேட்டை நட்சத்திரத்தால் ஏற்படும் பாதிப்புகள் !

🌠 27 நட்சத்திரங்களில் பதினெட்டாவது நட்சத்திரமாக இடம் பெறுவது கேட்டை நட்சத்திரம் ஆகும். இது விருச்சிக இராசிக்குரிய நட்சத்திரம் ஆகும். கேட்டையின் அதிபதி புதன் பகவான் ஆவார். இது பெண் நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் கேட்டை நட்சத்திரத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
கேட்டை நட்சத்திர பாதிப்புகள் :
🌠 1ம் பாகத்தில் பிறந்தால் தாய்வழி பாட்டிக்கு ஆகாது.
🌠 2ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்வழியில் வரும் தாத்தாவிற்கு ஆகாது.
🌠 3ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.
🌠 4ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்க்கு ஆகாது.
🌠 5ம் பாகத்தில் பிறந்திருந்தால் அந்த ஜாதகருக்கே ஆகாது.
🌠 6ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகரின் குடும்ப நபர்கள் அனைவருக்கும் தீமை உண்டாகும்.
🌠 7ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய் தந்தை ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் கெடுதல் உண்டாகும்.
🌠 8ம் பாகத்தில் பிறந்திருந்தால் மூத்த சகோதரனுக்கு கெட்டது.
🌠 9ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகருடைய துணையின் தந்தைக்கு கெடுதல் உண்டாகும்.
🌠 10ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகரின் குடும்பத்திற்கு கெடுதல் உண்டாகும்.
🌠 கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக் கூடியது சு+ரியன். எனவே, சு+ரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார்.
கேட்டைக்கு பொருந்தாத நட்சத்திரங்கள் :
அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
வழிபாட்டு ஸ்தலங்கள் :
🌠 அருள்மிகு வரதராஜப் பொருமாள் திருக்கோவில்.
🌠 அருள்மிகு உத்தமர் திருக்கோவில்.
🌠 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்.
🌠 திருக்கச்சு+ர் மருந்தீசர் கோவில்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment