சந்திர கிரஹனம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அரிய வான் நிகழ்வான சந்திர கிரகணம்....!   சு+ரியன், சந்திரன், பு+மி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று (ஆகஸ்ட 7) ஏற்படுகிறது. நிலவின் மீது படவேண்டிய சு+ரிய ஒளிக்கதிர்களை பு+மி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. நிகழும் நேரம் : 🌒 இன்று இரவு அதிக நேரம் பிடிக்கும் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை இயல்பான கண்களால் நாம் காணலாம். இந்த சந்திர கிரகணம் இந்தியா முழுதும் நன்றாகத் தெரியும். 🌒 இரவு 10.52 மணிக்கு கிரகணம் தொடங்கி அதிகாலை 12.48 மணிக்கு முழு சந்திர கிரகணம் தெரியும். 2.33 மணி வரை முழு கிரகணம் நீடிக்கும். அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடையும். சிறப்பு ஏற்பாடுகள் : 🌒 இந்த அரிய, வான் நிகழ்வான சந்திர கிரகணத்தை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இன்று நிகழ உள்ளது. இதனைக்காண, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 🌒 மேலும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த கிரகணத்தைக் காண இயலும். 🌒 அதே நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம், வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் பகல் என்பதால் அங்குள்ளவர்கள் இதைப் பார்க்க முடியாது. 🌒 சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏதுவாக சென்னை கிண்டி, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வேலு}ர் மாவட்ட அறிவியல் மையத்திலும் தொலை நோக்கி மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 🌒 இந்த காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும், இதேபோல், சந்திரகிரகணம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 31ந்தேதி ஏற்படும். ஒரு ஆண்டுக்கு 7 கிரகணங்கள் : 🌒 பொதுவாக ஒரு ஆண்டில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். அதில் 4 சு+ரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். சில சமயம் ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: 'பு+மியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சு+ரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும். சந்திரன் நிறம் மாறுவது தௌpவாக தெரியும்". இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment