ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
ஆவணி மாதத்தின் சிறப்புகள்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
ஆவணி மாத சிறப்புகள் !

⭐ தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.
⭐ ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதை போல் ஆவணி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.
⭐ ஆவணி மாதத்தில் சு+ரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சு+ரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சு+ரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை :
⭐ ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 'ஞாயிறு" என்றாலே 'சு+ரியன்". அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சு+ரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சு+ரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
ஆவணி அவிட்டம் :
⭐ ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பு+ணு}ல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பு+ர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பு+ணு}லை கழற்றிவிட்டு, புதிய பு+ணு}ல் அணிந்து கொள்வர். இதை குருமுகமாகத் தான் செய்ய வேண்டும்.
விநாயக சதுர்த்தி :
⭐ விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.
ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு :
⭐ ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.
⭐ விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.
⭐ ஜோதிட முறைப்படி பார்த்தால் சு+ரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம்.
⭐ சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகி பு+ஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment