அதிசய கோவில்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அதிசய கோவில்....!  நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் சென்னிமலை முருகன் கோவிலில் நடக்கும் அதிசயத்தை பற்றி பார்ப்போம்....!  🌊 ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ளது சென்னியாண்டவர் கோவில் எனப்படும் சுப்பிரமணியசாமி கோவில். 🌊 பல நு}று ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சு+ழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது. 🌊 இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும். 🌊 வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம். 🌊 இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும். மேலும் ஒரு அதிசயம்.... மாமாங்கத் தீர்த்தம் : 🌊 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment