ரிஷபராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ரிஷபம்!  🌼 ஜாதக கட்டத்தில் உள்ள பனிரெண்டு இராசிகளில் ஒன்றான உயர்வான உள்ளம் கொண்ட ரிஷப இராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம். 🌼 ரிஷப ராசியில் கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் 1 மற்றும் 2ம் பாதம் இந்த இராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் ஆகும். ரிஷப இராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். ரிஷபத்தின் வேறு பெயர்கள் : 🌼 மால், விடை, பாறல், புல்லம், நந்தி, மா, பசு, பாண்பில், ஏறு, மாடு, ரிஷபம். நட்பு இராசிகள் : 🌼 மிதுனம், மகரம், கன்னி, கும்பம் ஆகிய இராசிக்காரர்களுடன் ரிஷப இராசிக்காரர்கள் இணைபிரியா நட்புடன் இருப்பர். இந்த இராசிக்காரர்களுக்கு சிம்ம ராசிக்காரர்கள் தொல்லை தரக் கூடியவர்கள். பொதுவான குணங்கள் : 🌼 இந்த இராசிக்காரர்கள் நடுத்தர உயரமும் கூர்மையான கண்களையும் உடையவர்கள் ஆவர். இவர்கள் மிக கம்பீரமான தோற்றம் உடையவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அறிமுகமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும் பேச இவர்கள் சற்று சங்கடப்படுவர். பொதுவாகவே ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். எதிலுமே அவசரம் காட்ட மாட்டீர்கள். 🌼 இவர்கள் பேசும் போது தான் பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனம் கொண்டவர்களாக இருப்பர். பிறர் தம்மை குறை காணாத வகையில் நடந்து கொள்வர். பேராசை குணம் இவர்களிடம் காண்பது மிகவும் கடினம். இவர்களின் உறுதியான பேச்சு திறமையால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள் ரிஷப இராசிக்காரர்கள். இதுமட்டுமில்லாமல் நல்ல ஞாபக சக்தி உடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் தற்பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் அதிகம் ஆசைப்படாதவர்கள். 🌼 அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்திலேயே தன்மானமும் கௌரவமும்தான் முக்கியம் என எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் நடந்து கொள்ள கூடியவர்கள். இவர்களுக்கு வெண்மை மிகவும் பிடித்த நிறமாகும். இந்த இராசிக்காரர்கள் ஆடம்பரமாக வாழ விரும்பாதவர்கள். இவர்களிடம் எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புத்தன்மை அதிகமிருக்கும். 🌼 இந்த இராசிக்காரர்கள் வியாபாரம் செய்வதில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த செயலை மேற்கொண்டாலும் உறுதியாகவும் துணிவாகவும் செய்து முடிப்பர். இவர்கள் பல மொழிகளை கற்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை சற்று தாமதம் இருந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். இவர்களுக்கு மனைவி வழியில் கடன் தொல்லைகள் ஏற்படும். இவர்களுக்கு புத்திரர் வழியில் கவலைகள் ஏற்படும். பெண் குழந்தைகள் என்றால் நல்ல அனுகூலம் உண்டு. அதிஷ்டம் தரக் கூடியவைகள் : அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம் அதிர்ஷ்ட நாள் - வெள்ளி அதிர்ஷ்ட கல் - வைரம் அதிர்ஷ்ட எண் - 5,6,8 இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment