ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
கடகராசிகாரர்கள் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
கடகம்

✴ ஜோதிட சாஸ்திரத்தில் நான்காவது ராசியாகிய கடக ராசிக்காரரின் குணங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியத்தை பற்றி பார்ப்போம்.
✴ நல்ல குணங்களுக்கு உரியவர்களாகிய கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிக்காரர்கள் என்கிறார்கள்.
கடகத்தின் வேறு பெயர்கள் :
✴ மதி, நள்ளி, குளிர், கள்வன், சேக்கை, அலவன், நண்டு, கொண்டல், பாறப்பன் ஆகியவை கடக ராசியை குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும்.
நட்பு இராசிக்காரர்கள் :
✴ கடக ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.
குணங்கள் :
✴ கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தர்ம காரியங்கள் செய்வதில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதில் சிறந்தவர்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர்.
✴ கடக ராசிக்காரர்களை பொருத்தவரை உடல் நிலையில் ஒரே மாதிரியான ஆரோக்கியம் இருக்காது. சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போன்று தோன்றும். சில நாட்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவார்கள். தௌpவான மன நிலை இருக்காது. மன குழப்பங்கள் அதிகமாக இருக்கும்.
✴ இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர். இந்த ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையு+றும் ஏற்படாது. கடக ராசிக்காரர்களுக்கு பெரியவர்களிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும்.
✴ சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார். பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தருபவை :
✴ எண் - 1,2,3,9,10
✴ நிறம் - வெள்ளை, சிவப்பு
✴ கல் - முத்து
✴ திசை - வடகிழக்கு
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment