சூரியன்  வரலாறு
******************
ஐரோப்பா 'தென்அமெரிக்கா' சீனா முதலிய நாடுகளில் அழிபாடுற்ற நிலையில் சூரியன் கோயில்கள் காணப்படுகிறது என்றும் ஜப்பான் நாட்டுச் சக்ரவர்தி சூரியவமிசத்தவன்
என்றும் சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்ட மதம் சௌரமதம் என்றும்  காச்மீரத்தில் 8_ஆம்நூற்றாண்டில் மார்த்தாண்டர்(சூரியன்) கோயில் ஏற்பட்டது என்றும் ஒரிசாவில் பூரிக்கு
அருகில் உள்ள கொனார்க் என்ற இடத்தில் உள்ள சூரியன் கோயில் பிரசித்தமானது என்றும் மகாபலிபுரத்தில் அழகான சூரியன் சிலை ஒன்று இருக்கிறது என்றும் '   ரிக் வேதத்தில் சூரியன் துதிகள் காணப்படுகிறன என்றும் கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது

உலகத் தோற்றத்தின்போது முதன் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று அவ்வோசையிலிருந்து ஒளிமயமான சூரியன் தோன்றினான் இவ்வாறு மார்கண்டேய புராணம் கூறுகிறது காசிபருக்கு அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு  மக்களே பன்னிரு ஆதித்தர் ஆனார்கள் என்று பாரதம் கூறுகிறது .
சூரிய பகவானுக்கு உஷாதேவி பிரத்தியுஷா தேவி எனற இருவரும் மனைவிமார்கள் யமன் சனி அசுவினி தேவர் சுக்ரீவன் கர்ணன் முதலியோர் புத்திரர்கள் யமுனை பத்திரை முதலியோர் புத்திரிகள்

இவர் நவக்கிரகங்களிலே தலைவர்
சுபக்கிரகம் மூவகை நாடிகளிலே பிங்கலை:
மூவகைக் குணங்களிலே சாத்வீகம் "
குலத்திலே சத்திரியர்.  சிவனதுகண்களிலே வலக்கண் புகழ்
மங்களம் '  உடல்நலம் ' ஆட்சி திறன் செல்வாக்கு முதலியவற்றை கொடுப்பவர் அக்கினி இவரின் அதிதேவதை:
மலரிலே செந்தாமரையையும் இரத்தினத்திலே மாணிக்கத்தையும்
தானியத்திலே கோதுமையையும்
உலோகத்திலே செம்பையும்
சமித்திலே வெள்ளெருக்கையும்
நிவேதனத்தில் கோதுமைச் சக்கரான்னத்தையும் இவர் பிரீதியாகஏற்கிறார்
சூரியனை ச் சிவப்பு மலர்களால் அருச்சித்தல் !
சிவப்பு ஆடை அணிதல் 'மாணிக்கமணி அணிதல் ஞாயிறு கிழமை விரதமிருத்தல் சிவப்பு நிறப்பசு தானம் செய்தல் கோதுமை தானம் செய்தல்
சூரிய நமஸ்காரம் செய்தல் என்பவற்றால் சூரிய கிரக தோஷம் 

No comments:

Post a Comment