ஐய்யப்பனின் வரலாறு பிரமிக்க வைக்கிறது

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp பிரம்மிக்க வைக்கும் ஐயப்பனின் வரலாறு ! ஐயப்பன் வரலாற்றில் முதல் பரிமாணம்! தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தம் பெறுவதற்காகவும், துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருபாற்கடலைக் கடந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய 'காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய 'ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து 'ஆலகால விஷமாக" திரண்டு தேவர்களையும், அசுரர்களையும் அழிக்க துரத்தியது. தேவர்களும் அசுரர்களும் பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அந்த ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றியதுடன் நீலகண்டன் ஆனார். அதன்பின் அவர்கள் திருபாற்கடலைக் கடந்தபோது திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களான சங்கநதி, பதுமந்தி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திரணி, அறுபத்தாறாயிரம் அரம்பாஸ்த்திரீகள், காமதேணு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம் முதலானவை தோன்றின. ஆனால் தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்த தேவாமிர்தம் தோன்றவில்லை. அதனால் மனச்சோர்வடைந்த தேவர்களும், அசுரர்களும் செய்வதறியாது ஏங்கினர். தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தேவாமிர்தம் பாற்கடலில் தோன்றியது. தேவர்கள் அங்கு இல்லாதிருக்கவே அதனை அங்கிருந்த அசுரர்கள் பெற்று தமதாக்கிக் கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரிய சுவை இனி உங்கள் இல்லம் தேடி... நம்ம ஊரு வெப்சைட் யேவiஎந ளுpநஉயைட (நேட்டிவ் ஸ்பெஷல்)-ல். இங்கே கிளிக் செய்து உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செஞ்சு குடும்பத்தோட சாப்பிடுங்க!  இதனைக் கண்ட திருமால் தேவாமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என எண்ணி அதனை அவர்களிடம் இருந்து தந்திரமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்தார். அசுரர்களின் பலகீனத்தை (அழகான பெண்களை கண்டால் மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த நாராயண மூர்த்தி 'மோகினி" அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி, தேவாமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தந்திரமாகப் பெற்று தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்த அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்த்துவதற்காக கைலாசபதியான ஸ்ரீபரமேஸ்வரன்; நாராயண மூர்த்தியின் மோகினி அவதாரத்தின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள அவ்விரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்ற ஸ்ரீஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராண வரலாறுகள் கூறுகின்றது. ஆனால் பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெருந்தவம் செய்து சிவபிரானிடம்;, தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்க துணிந்தான். சிவபிரான் செய்வது அறியாது திகைத்து நின்றபோது மகாவிஷ்ணு மோகினி ரூபமெடுத்து பஸ்மாசுரன் முன் தோன்றி அவனின் எண்ணத்தை திசை திருப்பி அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து பஸ்பமாக்கினார். அந்த மோகினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் நாராயண மூர்த்தியாகிய மோகினி மேல் மோகம் கொள்ள 'ஹரிஹரசுதன் ஐயப்பன்" அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது. இவ்விரு புராணங்களும் (விஷ்ணு புராணமும், பத்ம புராணமும்) இரு வேறு நிகழ்வுகளைக் கூறினாலும் அவை இரண்டும் ஐயப்பன் அவதாரம் நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்த ஹரிஹரபுத்திரன் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன. தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment