நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் மழை பொழியும் அதிசய கோவில் மரம் !
மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! அதிசய மரம்!!
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை. புலிகள் உட்பட பல வனவிலங்குகள் வாழும் இந்த மலையில் வருடா வருடம் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்....

🌳 அத்ரி என்னும் மகரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி என்னும் பெயர் வந்துள்ளது.
🌳 அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான, அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம் ஆழ்வார்குறிச்சியின் அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் 'அத்ரி பரமேஸ்வரர்" என்றும், இறைவி 'அத்ரி பரமேஸ்வரி" என்றும் அழைக்கப்பட்டனர்.
🌳 அதோடு கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் இங்கு வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும், அதை காண்பது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.

🌳 சிவன் கோவிலிற்கு அருகே பாலை மரம் என்றொரு அரியவகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு அற்புதமான பன்னீர் மழை பொழிகிறது.
🌳 பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் ஏதாவது 2 நாட்கள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒருவகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.
🌳 அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றன. அதை பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழைபொழிவது போல காட்சி அளிக்கின்றது.
🌳 வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தல் அது பன்னீர் வாசனையில் உள்ளது. ஆனால், அது மிக விரைவில் காய்ந்துவிடுகிறது. மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்கு தெரிவதில்லை.
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

No comments:
Post a Comment