வாட்ஸ்-அப் செயலியில் குரூப் வீடியோ கால் செய்வதற்காக சாட் கட் வசதி !






வாட்ஸ்-அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே இதைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் குரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது.
இதில் வீடியோ கால் மேற்கொள்ள சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி பின் மற்றவர்களை அதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அது சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும் விரைவில் இது எளிமையாக்கப் பட்டு வருகிறது.
Whatsapp ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்தியோக பட்டம் வழங்கப்பட்டுள்ளது இதனால் குரூப் சாட் செய்யும் போது ஒரே கிளிக்கில் வீடியோ கால் செய்யலாம் பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய group contact cell இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம்.
புதிய அப்டேட்டில் குரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
Whatsapp ios செயலியில் ஏற்கனவே வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment