சிறியவரை ஏலனம் செய்யாதே ! (கதை)

ஒரு பணக்கார வீட்டில் நாய் ஒன்று இருந்தது. அது ஒருநாள் பகலில் படுத்திருந்த போது அதன் மீது ஒரு ஈ அதன் உடம்பில் அங்கும் இங்கும் அமர்ந்து கொண்டு இருந்தது நாய் அதன் வாலால் விட்டிவிட்டுக்கொண்டிருந்தது !
இருந்தும் கூட ஈ மேலும் மேலும் அதன் உடம்பில் அமர்ந்து கொண்டு இருந்தது கோபம் கொண்ட அந்த நாய் கோபத்துடன் ஏய் ஈ உனக்கு என்ன? துனிச்சல் நான் விரட்டியும் போக மறுக்கிறாய் உன்னை ஒரே கடியில் கடித்து தின்றுவிடுவேன் . என்று ஈயை பார்த்து தன் வாயால் கவ்வி பிடிக்க முயன்று தோற்று போனது  தன்னை கொல்ல நினைக்கும் நாயிடம் . 
ஈ கேட்டது என்னை ஏன்?கொல்ல பார்க்கின்றாய் நாயாரே  என்றது அதற்கு நாய்கூறியது நான் எவ்வளவு பெரிய பணகார வீட்டு நாய் நீ ஒரு  அருவருப்பான அற்ப ஈ நீவந்து என் மீது அமர்ந்தால் எனக்கு கோபம் வராதா ? என்றது இதனை கேட்ட ஈக்கு கோபம் வந்தது. 
என்னையா கேவலமான ஈ என்றாய் என்று நாய் கண் இமைக்கும் நேரத்தில் நாயின் மூக்கில் உள்ளே சென்றது சற்றும் எதிர்பார்க்காத நாய் துடிதுடித்து போனது. மீண்டும் ஈ சும்மா விட வில்லை நாயின் காதிற்குள் சென்று நாயை கதிகலங்க வைத்துவிட்டது . நாய் மிரண்டு போய் ஈயாரே என்னை மன்னித்துவிடு இனி யாரையும் இழிவாக பேச மாட்டேன்னு உனக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றேன் . என்றதும் ஈ நாயை தொல்லை செய்வதை நிறுத்தி விட்டு சென்று விட்டது .
நாயிக்கும் நல்ல புத்தி வந்தது !
ஒருவர் நிலைக்கண்டு அவரை ஏலனம் இகழ்ந்து அல்லது தாழ்த்தி நினைப்பதோ ! அல்லது பேசுவதே ! கூடாது குழந்தைகளே !